2009-03-19 19:44:10

மரணதண்டனையை நீக்குமாறு அமெரிக்க ஆயர்கள் நியூ மெக்சிக்கோ அரசை வலியுறுத்துகின்றனர். 190309 .


மரணதண்டனையை நீக்குமாறு அமெரிக்க ஆயர்கள் நியூ மெக்சிக்கோ அரசை வலியுறுத்துகின்றனர் . அமெரிக்க ஆயர்கள் குழுவின் மனைவாழ்வு , மற்றும் மனித வளர்ச்சிக்கான ஆணையகத் தலைவர் ஆயர் வில்லியம் மர்பி . அண்மையில் நியூ மெக்சிக்கோ மரணத்தீர்ப்பு வழங்குவதை அமல் படுத்தி சட்டமாக்கியுள்ளது . அங்குள்ள ஆளுநர் பில் ரிச்சர்ட்சன் என்பவருக்கு எழுதிய மடலில் , முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான் பாலும் , தற்போதைய திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டும் , மனித வாழ்வுக்கு மதிப்புக் கொடுத்து மரண தண்டனையை நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளதையும் மேற்கோள் காட்டி , மரணதண்டனையைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் . ஆளுநரின் ஒப்புதல் கையொப்பத்துக்குக் காத்திருக்கும் மரணத்தீர்ப்பு வழங்கும் சட்டத்தைத் தவிர்த்து , வாழ்வைப் போற்றும் கலாச்சாரத்துக்கு வழிசெய்வோம் என ஆயர் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.