2009-03-19 19:41:45

பல் சமயக் கருத்தரங்கும் நற்செய்தி அறிவிப்பதும் தலையாய பணி என்கிறார் பேராயர் மச்சாடோ . 190309 .


கத்தோலிக்கத் திருச்சபையின் சமூகச் சிந்தனைகள் பற்றிய கருத்தரங்கு மும்பையில் நடந்தது . இதில் இந்தியக் கத்தோலிக்க ஆயர் குழுவின் 650 ஆயர்கள் கலந்து கொண்டார்கள் . வத்திக்கானின் சர்வசமயக் கலந்துரையாடல் மன்றத்தின் முந்நாள் செயலர் பேராயர் மச்சாடோ தலைமை உரை நிகழ்த்தினார் . அவர் தற்பொழுது நாசிக் மறைமாவட்டப் பேராயராக இருக்கிறார் .



இந்தியக் கத்தோலிக்கர்கள் பலதரப்பட்ட கலாச்சாரத்தைக் கொண்ட சமூகத்தில் வாழ்கின்றார்கள் . பல் சமயக் கலந்துரையாடல் என்பது தவிர்க்க முடியாதது எனப் பேராயர் மச்சாடோ கூறினார் . இது நமது இறைப்பற்றோடு பின்னிப்பிணைந்துள்ளது எனத் தெரிவித்தார் . நாம் கொண்டுள்ள கடவுள் நம்பிக்கையை வாழ்ந்து காண்பிக்க வேண்டும் என்றும் , நம்முடைய அன்பு கலந்துரையாடலுக்கு வழிசெய்யவேண்டும் எனவும் தெரிவித்தார் . பிற சமயத்தவரோடு கலந்து உரையாடும்போது நாமும் வளமையுறுகிறோம் என பேரயாயர் மச்சாடோ மேலும் தெரிவித்தார் .








All the contents on this site are copyrighted ©.