2009-03-18 15:26:30

இந்திய கத்தோலிக்கர் திருச்சபையின் சமூகக் கோட்பாடுகளின் அடிப்படையில் சமூகத்தைக் கட்டி எழுப்ப அழைப்பு


மார்ச்18,2009. திருச்சபையின் சமூகக் கோட்பாடுகளின் அடிப்படையில் நீதியும் அமைதியும் நிறைந்த சமூகத்தைக் கட்டி எழுப்புவதற்கு இந்திய கத்தோலிக்கருக்கு அழைப்புவிடுத்துள்ளார் மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ்.

கத்தோலிக்கத் திருச்சபையின் சமூகக் கோட்பாடுகள் பற்றி மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய கர்தினால் கிராசியாஸ், மிகுந்த வளம் நிறைந்த இந்தியாவில் இலட்சக்கணக்கான மக்கள் மனிதத்தைக் கீழ்மைப்படுத்தும் வறுமையில் வாழ்கின்றனர் என்றார்.

இந்தியாவில் 16 கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட தலித்துக்கள் எவ்வாறு பாகுபாட்டுடனும் மனிதமின்றியும் நடத்தப்படுகின்றனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இதில் தனது அறிக்கையை சமர்ப்பித்த திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் ரெனாத்தோ மர்த்தீனோ, இந்தியாவின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகள் செய்தித் தாள்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன, இவற்றிற்குத் திருச்சபையின் சமூகக் கோட்பாடுகள் நல்ல தீர்வாக அமையும் என்று கூறியுள்ளார்.

இந்தியக் கிறிஸ்தவர்களில் ஏறத்தாழ 60 விழுக்காட்டினர் தலித் மக்கள் என்று சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.