2009-03-18 15:14:29

ஆயரின் சொல்லும் எடுத்துக்காட்டான வாழ்வும் குருக்களின் ஆன்மீக மற்றும் திருவருட்சாதன வாழ்க்கைக்குத் தூண்டுதலாக இருக்கும், திருத்தந்தை


மார்ச்18,2009. புனித பவுலுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இவ்வாண்டு, கிறிஸ்துவிடமிருந்து திருச்சபை பெற்றுள்ள நற்செய்தி அறிவிப்பதற்கான உடனடி தேவையை மீண்டும் நினைவுபடுத்துவதற்கு நல்ல தருணமாக இருக்கின்றது. இந் நற்செய்தி அறிவிப்புப் பணியில் ஆயர்கள் இறைமக்களுக்கு முன்னோடிகளாக இருக்க வேண்டும். கிறிஸ்துவிடம் புதிய சீடர்களை அழைத்துச் செல்வதில் ஆயர்கள் விசுவாசத்தின் போதகர்களாக இருக்க வேண்டும். இப்பணியைச் செய்யவும் இன்றைய உலகின் சவால்களை எதிர்கொள்வதற்கும் ஆயர்கள் ஒருவர் மற்றவருடன் ஆழமான உறவில் ஒன்றித்திருக்க வேண்டும். மறைமாவட்டங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு, குறிப்பாக உங்கள் நாட்டில் குருக்களைப் பகிர்ந்து கொள்வது, சகோதரத்துவ தோழமை உறவுகளை வளர்க்க உதவும் என்ற திருத்தந்தை ஓர் ஆயருக்கும் குருக்களுக்கும் இடையே இருக்க வேண்டிய நல்லுறவுகள் பற்றிக் கோடிட்டுக் காட்டினார்.

குருக்கள் தங்கள் ஆயரில், தங்களை அன்பு செய்து, தாங்கள் சொல்வதைக் கேட்டு, தங்களின் துன்ப சோதனைகளில் ஆறுதலை வழங்கக்கூடிய ஒரு தந்தையை, ஒரு சகோதரரை பார்த்தார்களானால் அவர்கள் தங்கள் திருப்பணிகளை முழுமனத்துடனும் மதிப்புடனும் பலனுள்ள விதத்திலும் செய்வதற்குத் தூண்டப்படுவார்கள். ஆயரின் சொல்லும் எடுத்துக்காட்டான வாழ்வும் அவர்களின் ஆன்மீக மற்றும் திருவருட்சாதன வாழ்க்கைக்குத் தூண்டுதலாக இருக்கும். எனவே ஆயர்களே நீங்கள் குருக்கள் மற்றும் துறவிகளின் வாழ்வில் கண்ணும் கருத்துமாக இருக்குமாறு அழைக்கிறேன். போதனைக்கும் வாழ்க்கைக்கும் இடையே முரண்பாடுகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே உறுதியான சான்றுகளாகத் திகழ முடியும். RealAudioMP3

உங்கள் மறைமாவட்டங்களில் இறையழைத்தல்கள் அதிகம் இருக்கின்றன. இதற்கு நம் ஆண்டவருக்கு நன்றிசொல்லும்வேளை, இதில் நன்கு தேர்ந்து தெளிதலும் அவசியம். குருத்துவ வாழ்விற்கு மாணவர்கள் நன்றாகத் தயாரிக்கப்பட வேண்டும்.

மேய்ப்புப் பணிகளில் உதவி செய்யும் வேதியர்கள் ஆயர்களின் பொருளாதார, நன்னெறி மற்றும் ஆன்மீக ரீதியிலான ஆதரவைப் பெற்றார்கள் என்றால் அவர்கள் தங்களின் வாழ்க்கையையும் வேலைகளையும் மேம்படுத்த முடியும்.

இன்றைய நவீன சமுதாயத்தில் ஆயர்கள் எதிர்கொள்ளும் பல சவால்களில் குடும்பங்களும் ஒன்று. ஆப்ரிக்கக் குடும்பத்தின் முக்கிய விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இன்று பரவிவரும் பிரிவினைவாதச் சமயக் குழுக்களும் அவைகளின் தாக்கங்களும் அதிகமாக இருப்பதால் இவை குறித்த விழிப்புணர்வை சிறாருக்கும் இளம் வயதுவந்தோருக்கும் இன்னும் குறிப்பாக பல்கலைக்கழக வட்டங்களிலும் வழங்க வேண்டும்.

உங்கள் நாட்டின் திருச்சபை மற்றும் சமூக வாழ்வில் பொதுநிலை விசுவாசிகளின் ஆக்கப்பூர்வமான ஈடுபாடு அதிகரித்து வருவது அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன். மகளிர் கழகங்களும் அதிகரித்து வருகின்றன. எனவே இவர்களுக்கு உறுதியான கிறிஸ்தவ வாழ்வில் பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும்.

இன்றைய பொருளாதாரச் சூழலில் திருச்சபை நலிந்தவர்களுக்கு உதவி செய்கின்றது. உங்கள் அனைவருக்கும் ஆசீரை வழங்குகிறேன் என்று காமரூன் ஆயர்களுக்கானத் தனது உரையை நிறைவு செய்தார RealAudioMP3 ் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.