2009-03-17 19:28:03

திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டின் ஆப்பிரிக்கத் திருப்பயணம் . 17—3-09 .

இச் செவ்வாய் காலை உரோமை நேரம் காலை 10 மணி்க்கு ,( இந்திய நேரம் நண்பகல் 2.30 மணிக்கு , ஆப்பிரிக்காவின் காமரூன் நேரம் காலை 10 மணி ) திருத்தந்தை உரோமையின் பியூமிசீனோ விமான தளத்திலிருந்து காமரூன் நாட்டுக்குத் தனி விமானத்தில் திருப்பயணமாகக் கிளம்பினார் . உரோமையிலிருந்து 4200 கி.மீ. தூரத்தை 6 மணி நேரத்தில் கடந்து காமரூன் நாட்டில் மாலை 4.00 மணி்க்குச் சென்றடைந்தார் திருத்தந்தை . உரோமை நேரமும் ஆப்பிரிக்காவின் காமரூன் நேரமும் ஒரே நேரமே . உலகின் நிலப்பரப்பில் ஆசியாவுக்கும் , அமெரிக்காவுக்கும் அடுத்ததாக ஆப்பிரிக்கா மிகப் பெரிய கண்டமாக இருக்கிறது . 2005 ஆம் ஆண்டு உலக மக்கள் கணக்கெடுப்புப்படி ஆப்பிரிக்காவின் மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 14.15 விழுக்காடாக இருந்தது . அடுத்த ஆண்டு இது 14.94 விழுக்காடாக உயரும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது . ஆப்பிரிக்காவில் மொத்தம் 53 நாடுகள் மற்றும் இரு சிறிய பகுதிகள் உள்ளடங்குகின்றன . காமரூன் மற்றும் அங்கோலா நாடுகள் மத்திய ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதியில் உள்ளன . அட்லாண்டிக் கடற்கரையில் உள்ளன . இந்நாடுகளில் 1415 ல் போர்த்துக்கல் மன்னர் ஜான் என்பவர் காலத்தில் இருந்து மேலை நாட்டுக் குடியேற்றம் தொடங்கியது . 1455 ஆம் ஆணடிலிருந்து அங்கு கிறிஸ்தவக் கோயில்கள் கட்டப்பட்டு நற்செய்தி அறிவிப்புத் தொடங்கியது .

முதல் உலகப்போருக்குப் பிறகு காமரூன் நாட்டை ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரும் பங்கு போட்டுக்கொண்டு ஆண்டதால் அங்கு ஆங்கிலமும் பிரெஞ்சு மொழியும் பேசப்படுகிறது . 1961 ல் காமரூன் விடுதலை பெற்றது . குடியாட்சி நடந்து வருகிறது . கத்தோலிக்கச் சமயம் 26.80 விழுக்காடும் , பிற கிறிஸ்தவ மறைகள் 15 விழுக்காடும் பழங்குடிச் சமயங்கள் 30 விழுக்காடும் , 20 விழுக்காடு இஸ்லாம் மதத்தினரும் வாழ்கின்றனர் . கனிம வளமும் , எண்ணை வளமும் நிறைய இருக்கிறது . உலகத்திலேயே லஞ்ச ஊழலில் முதலாவது நிலையிலிருப்பதாக 2007 ஆம் ஆண்டு காமரூன் நாட்டை ஐ .நா . அறிவித்தது . 1989 லிருந்து வத்திக்கான் ஒப்பந்தப்படி காமரூன் நாட்டில் கத்தோலிக்கக் கல்வி , மருத்துவ மனைகள் , சமூக சேவை நிறுவனங்கள் நிறைய உள்ளன . காமரூன் நாட்டின் தலைநகராகிய யவுந்தேயின் மறைமாவட்டத்தில் சைமன் விக்டர் டோனியே பக்கோட் பேராயராக இருக்கிறார் .

அங்கோலா நாடும் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து போர்த்துக்கல் அரசின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது . அங்கோலா போர்த்துக்கல் ஆதிக்கத்திலிருந்து 1975 ல் விடுதலை பெற்று குடியாட்சி பெற்றது . அங்கோலா போர்த்துக்கல் நாட்டைப்போல 14 மடங்கு பெரியது . பிரான்ஸ் , ஜெர்மனி , இங்கிலாந்து மற்றும் இத்தாலி இவை அனைத்தையும் ஒன்று சேர்த்தாலும் அவற்றைவிட மிகப்பெரிய நாடு . அங்கு மக்கள் தொகை குறைவே . கத்தோலிக்கத் திருச்சபை 55.6 விழுக்காடும் , பிற கிறிஸ்தவ சமயத்தவர் 15 விழுக்காடும் , பழங்குடி மக்கள் சமயம் 28 விழுக்காடும் , இஸ்லாம் மிகக் குறைந்த அளவுமாக உள்ளன . 1978 லிருந்து திருச்சபை வானொலி என்ற பெயரில் கத்தோலிக்க வானொலி நிலையம் இயங்கி வருகிறது . அங்கோலா நாட்டின் தலைநகர் லூவாண்டா . இது 1575 ல் போர்த்துக்கீசியரால் நிறுவப்பட்டது . சென்ற ஆண்டு டிசம்பர் 31 கணக்குப்படி இந்நாட்டில் 27 ஆயர்களும் , 794 குருக்களும் , 2178 அருள் சகோதரிகளும் பணி செய்கின்றார்கள் . கிறிஸ்தவ சபையின் கல்விக்கூடங்களும் , மருத்துவ மனைகளும் , சமூக சேவை மையங்களும் மக்களுக்கு தொண்டு புரிகின்றன . 1490 ல் கிறிஸ்தவ நற்செய்தி அறிவிப்பாளர்கள் அங்குச் சென்றுள்ளனர் .

நவீன காலத்தில் ஆப்பிரிக்காவுக்குச் சென்ற முதல் பாப்பிறை திருத்தந்தை 6 ஆம் பவுல் ஆவார் . 1969 ஆண்டு ஜூலை 31 லிருந்து ஆகஸ்ட் 2 வரை உகாண்டா நாட்டில் திருப்பயணம் மேற்கொண்டார் . திருத்தந்தை 6 ஆம் பவுல் உலகம் எங்கும் 9 திருப்பயணங்கள் மேற்கொண்டிருந்தார் . அவருக்குப் பின் வந்த திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் 1985 மற்றும் 95ல் ஆப்பிரிக்காவின் காமரூனுக்கும் , 92 ல் அங்கோலாவுக்கும் திருப்பயணம் மேற்கொண்டிருந்தார் .. திருத்தந்தை 2ஆம் ஜான் பால் உலகெங்கும் 104 திருப்பயணங்களை மேற்கொண்டிருந்தார் . இவர்கள் இருவருமே இந்தியாவுக்கும் வருகை தந்திருந்தனர் .

திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் காமரூன் , அங்கோலா நாடுகளுக்குச் செல்வது முதல் தடவையாகும் . இது அவருடைய 11 வது அகில உலகத் திருப்பயணமாகும் .

இந்நாடுகளுக்கு திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை அங்குக் கத்தோலிக்க சமயத்தின் முதல்வராக , தூய பேதுருவின் வழித்தோன்றலாக , இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு தூய ஆவியானவரால் வழி நடத்தப்படும் திருச்சபையின் தலைவராகச் செல்கிறார் . அங்குள்ள இறைமக்களுக்கு , திருச்சபையின் தொண்டர்களுக்கு திருத்தந்தையின் திருப்பயணம் மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கும் . கடவுள் பற்றுள்ள மனிதராகக் கத்தோலிக்க மக்கள் திருத்தந்தையைப் போற்றி மதிக்கிறார்கள் . உலகில் வாழும் 100 கோடி கத்தோலிக்கர்களுக்கு வழிகாட்டும் தலைவராக இருக்கிறார் திருத்தந்தை . திருத்தந்தையின் பயணத்தின்போது வரும் 19 ஆம் தேதி திருத்தந்தையின் பாதுகாவலராகிய தூய வளனார் என்று செல்லமாகத் தமிழில் அழைக்கப்படும் சூசையப்பர் திருவிழா கொண்டாடப்படுகிறது . திருத்தந்தையின் பெயர் கொண்ட அந்நாளில் , திருத்தந்தை இவ்வாண்டு அக்டோபர் மாதம் உரோமையில் நடக்கவுள்ள ஆப்பிரிக்க ஆயர்களின் 2 வது சிறப்பு மன்றத்துக்கான வழிகாட்டும் கருத்துக்கள் அடங்கிய ஆவணத்தை வெளியிட உள்ளார் . மற்றும் கிறிஸ்தவத்தின் ஆயர்கள் போன்ற தலைவர்கள் , குருக்கள் , அரசுத் தலைவர்கள் , பிற சமயத்தவர் போன்ற பலரோடும் கருத்துப் பரிமாறுவார் . ஆப்பிரிக்காவுக்கு ஒப்புரவு , நீதி , மற்றும் அமைதி என்பது திருத்தந்தையின் பயண விருதாகவும், பரிசாகவும் , குறிக்கோளாகவும் இருக்கும் . இச்செவ்வாய் காலை திருப்பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இம்மாதம் 23 ல் அங்கோலாவில் பயணத்தை முடித்துக் கொண்டு அன்று மாலை 6 மணிக்கு உரோமையை வந்தடைவார் . தம் திருப்பயண வெற்றிக்காக தூய வளனார் ,மற்றும் அன்னை மரியிடம் பரிந்துரைத்துச் செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார் . திருத்தந்தையி்ன் இத்திருப்பயணம் ஆப்பிரிக்காவுக்கும் உலகுக்கும் நலமும் , வளமும் அருளும் பெற்றுத்தருமாறு நாம் அனைவரும் மன்றாடுவோம் .

All the contents on this site are copyrighted ©.