2009-03-16 15:18:31

மார்ச் 19ம் தேதியிலிருந்து சீன மொழியிலும் வத்திக்கான் இணையதளம்


மார்ச் 16,2009. மார்ச் 19ம் தேதியிலிருந்து வத்திக்கான் இணையதளம் சீன மொழியிலும் செயல்படத் தொடங்கும் என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் இன்று அறிவித்தது.

புனித கன்னிமரியின் கணவரும் அகிலத் திருச்சபையின் பாதுகாவலருமான புனித வளனின் பெருவிழாவான மார்ச் 19ம் தேதியிலிருந்து சீன மொழியிலும் வத்திக்கான் இணையதள பக்கங்களை வாசிக்கலாம் என்றும் அப்பத்திரிகை அலுவலகம் தெரிவித்தது.

www.vatican.ca என்ற இணையதளம் இத்தாலியம், ஆங்கிலம், ப்ரெஞ்ச், ஸ்பானியம், ஜெர்மானியம், போர்த்துக்கீசியம், இலத்தீன் ஆகிய ஏழு மொழிகளில் ஏற்கனவே வெளியாகிறது. வருகிற வியாழக்கிழமையிலிருந்து சீனத்திலும் வெளியாகும். இனிமேல் திருத்தந்தை மற்றும் திருப்பீட நடவடிக்கைகளை சீனத்திலும் வாசிக்கலாம் என்றும் பத்திரிகை அலுவலகம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.