2009-03-13 20:07:36

திருத்தந்தையின் மடல் மிக முக்கியமானது ,தந்தை லொம்பார்டி, 130309 .


திருத்தந்தையின் ஆயர்களுக்கான மடல் மிக முக்கியமானது என்கிறார் வத்திக்கான் திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் இயேசு சபைத் தந்தை பெடரிக்கோ லொம்பார்டி . இம்மாதம் 10 ஆம் தேதி திருத்தந்தை வெளியிட்ட மடலுக்குத் தந்தை லொம்பார்டி விளக்கம் அளித்துள்ளார் . பொதுவான ஒரு கருத்துப்பற்றி திருத்தந்தை மிக ஆழமாகவும் , மனம் திறந்தும் கருத்துத் தெரிவித்துள்ளதாக தந்தை லொம்பார்டி தெரிவிக்கிறார் . திருச்சபை முன்னர் விலக்கி வைத்திருந்தவர்களை கத்தோலிக்கத் திருச்சபையில் வரவேற்றதன் காரணமாக எழுந்த தாக்கத்தை திருத்தந்தை வேதனையோடும் கவலையோடும் அனுபவித்ததோடு திருச்சபையில் அமைதியை உருவாக்கும் முயற்சியாக இம்மடலைத் தீட்டியுள்ளதாகத் தந்தை லொம்பார்டி தெரிவிக்கிறார் . முழுமையான தகவல் கிடைக்காத சூழலில் திருச்சபைக்குப் புறம்பாக்கப் பட்டவர்களை ஏற்றுக் கொண்டதில் உண்டான சில தவறுகள் பற்றியும் திருத்தந்தை தாழ்ச்சியோடு முழுப்பொறுப்பையும் தாமும் தம் உடன் உழைப்பாளிகளுமே காரணம் என ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மேலும் தந்தை தெரிவித்துள்ளார் . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் மன்னிப்பு வழங்கி , ஒற்றுமைக்கு வழிவகுத்ததை அவரைப் பழித்துக் கூறுபவர்கள் உணரவேண்டும் எனத் திருத்தந்தை மடலில் கூறியுள்ளதை தந்தை லொம்பார்டி சுட்டிக்காட்டி சமாதானத்திற்கு நாம் வழிவகுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.