2009-03-12 17:37:26

லெபேப்ரே பிரிவினை சபையினரை திருச்சபையில் வரவேற்றது பற்றி விளக்கமளிக்கிறார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .120309 .


இம்மாதம் 10 ஆம் தேதி உலக ஆயர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள விளக்க மடலில் அவர் பழைய கொள்கை வாதம் கொண்ட லெபேப்ரே பிரிவினை சபையினரை மீண்டும் திருச்சபையில் ஏற்றுக்கொண்டது எதிர்பாராத கசப்பு உணர்வையும் , பல எதிர்ப்புக் குரலையும் வெளிப்படு்த்தியது பற்றி வருத்தம் தெரிவித்துள்ளார் .

பத்தாம் பத்தி்னார் பிரிவினை சபையின் மீது கத்தோலிக்கத் திருச்சபை விதித்திருந்த வெளியேற்றச் சட்டத்தை நீக்கிய பிறகே , ஆயர் வில்லியாம்சன் விஷவாயுச் சிறையில் யூதர்கள் படுகொலை செய்யப்படவில்லை எனக்கூறிய செய்தி தெரிய வந்தது எனத் திருத்தந்தை தெரிவித்தார் . முந்நாள் திருத்தந்தையால் அந்தப் பிரிவினைச் சபையினர் 1988 ஆம் ஆண்டு திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டனர் . அவ்வாறு வெளியேற்றப்பட்டதற்குப் பதிலாக தற்போதைய திருத்தந்தை அவர்களைச் சில நிபந்தனைகளோடு மீண்டும் கத்தோலிக்கத் திருச்சபையில் வரவேற்றுள்ளார் . யூய சமயத்தவர் இந்த மன்னிப்பும் வரவேற்பும் யூதர்களுக்கு எதிரானதாக எண்ணினார்கள் . யூதத் தலைவர்களோடு திருத்தந்தை பேசி இந்த தவறான கருத்தை நீக்க வழிசெய்தார் . யூத நண்பர்கள் தம் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு நல்ல நம்பிக்கைக்கு வழிசெய்துள்ளதாகத் திருத்தந்தை வெளியிட்டுள்ளார் .



இணைய தளத்தில் ஆயர் வில்லியாம்சனுடைய கருத்துக்களைக் கண்டறியாது அந்தக் குழுவினரை கத்தோலிக்கச் சபையில் ஏற்றுக்கொண்டது தவறுக்கு வழிவகுத்தது என்று திருத்தந்தை தெரிவித்துள்ளார் .

மேலும் திருச்சபையில் பத்தாம் பத்தினாதர் பிரிவினை சபையினரை வரவேற்றது குறித்து உடனடியாக சரியான விளக்கம் அளிக்கத் தாம் தவறியதும் பிறர் அதனைத் தவறாகப் புரிந்து கொள்ளக் காரணமாக இருந்ததாகவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார் . தவறான போக்குக் கொண்டு பின்னர் திருந்திய வில்லியாம்சன் போன்ற தனிமனிதர்களையே கத்தோலிக்கச் சபையில் வரவேற்றுள்ளதாகவும் பத்தாம் பத்தினார் சபைமுழுவதையும் அல்ல என்றும் திருத்தந்தை விளக்கம் அளித்துள்ளார் . தவறு செய்பவர்களை மன்னித்து வரவேற்பதே சரியானது என்று திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.