2009-03-12 13:30:04

மார்ச் 13-வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


புனித யுப்ராசியா விழா. அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், தனது உடமைகளை ஏழைகளுக்கும் அகதிகளுக்கும் கோவில்களுக்கும் கொடுங்கள் என்று எழுதி வைத்தவர். சிறுவயது முதல் கடும் தபவாழ்வு வாழ்ந்தவர்.

1138 திருத்தந்தை 4ம் விக்டர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1615 திருத்தந்தை 12ம் இன்னோசென்ட் பிறந்தார்

1781 - வில்லியம் ஹேர்ச்செல் யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தார்

1900 - பிரான்சில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.

1921 - மங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.

1969 - அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பியது.

2003-இத்தாலியில் 350,000-ஆண்டு பழமையான மனித அடிச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேச்சர் இதழ் அறிவித்தது.

மார்ச் 13 உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள்








All the contents on this site are copyrighted ©.