2009-03-12 17:42:57

இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் கடும் சண்டை .120309 .


இலங்கையின் வடபகுதியில் கடும் சண்டை நடப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன .



இலங்கையின் வடபகுதியில் தமிழ் விடுதலைப்போராளிகள் வசமிருந்த மருத்துவ முகாமையும் இலங்கை ராணுவம் கைப்பற்றியுள்ளாத இலங்கையின் ராணுவ அதிகாரி உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார் . இப்புதன்கிழமை இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் கடும் சண்டை நடந்ததாக இராணுவம் தெரிவிக்கிறது . மருத்துவ முகாம் இழப்புப் பற்றி போராளிகள் தகவல் ஏதும் வெளியிடவில்லை . பாதுகாப்புப் பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதியில் இராணுவம் 49 குழந்தைகள் உட்பட 133 பொதுமக்களைக் கொன்றுள்ளதாகத் புலிகளின் ஆதரவு தமிழ்ச் செய்திகள் கூறுகின்றன . கிளஸ்டர் பாம் என்ற கொத்து வெடிகளை இலங்கை ராணுவம் பயன்படுத்தி அப்பாவி மக்களை கொல்வதாகவும் அச் செய்தி கூறுகின்றது . புலிகளின் முக்கிய படைத்தலைவர் சபாரத்தினம் செல்வத்துரையை குண்டு வீசிக் கொன்றுவிட்டதாகவும் , புலிகள் 37 கிலோமீட்டர் பகுதியில் மட்டும் இருப்பதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது . இந்தச் செய்திகளை வெளியிடும் பிபிசி செய்தி நிறுவனம் இதற்கு சரியான ஆதாரம் இல்லை எனவும் கூறியுள்ளது .








All the contents on this site are copyrighted ©.