2009-03-11 16:20:18

சூடான் அரசுத்தலைவரைக் கைது செய்வது அந்நாட்டின் துன்பத்தைக் களைவதற்கு எவ்விதத்திலும் உதவி செய்யாது, கத்தோலிக்க ஆயர்கள்


மார்ச்11, 2009. சூடான் அரசுத்தலைவர் ஓமர் அல் பஷீரைக் கைது செய்வது அந்நாட்டின் துன்பத்தைக் களைவதற்கு எவ்விதத்திலும் உதவி செய்யாது என்று அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கூறினர்.

ஹாகிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த வாரத்தில் அல் பஷீருக்கு கைது ஆணை பிறப்பித்துள்ளதையடுத்து ஜெர்மன் பிறரன்பு நிறுவனத்திற்குப் பேட்டிளித்த சூடான் ஆயர்கள் இவ்வாறு கூறினர்.

இக்கைது ஆணை, சந்தேகத்தை அதிகரித்து டார்பூரில் அமைதிக்கான நடவடிக்கைகளுக்குத் தடங்கலாக அமையும் என்று சூடான் ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் ருடோல்ப் டெங் மஜாக் எச்சரித்தார்.

நாட்டுத தலைவர்கள் மற்றும் புரட்சியாளர்களிடம் அதிக நேர்மையும், சூடானைக் காப்பதற்கான சர்வதேச சமுதாயத்தின் உண்மையான அர்ப்பணமும் தேவைப்படுகின்றது என்றும் ஆயர் மஜாக் மேலும் கூறினார். என்னதான் நடந்தாலும் மக்கள் நீதியுடன் நடத்தப்பட வேண்டுமென்ற வருப்பத்தையும் அவர் முன்வைத்தார்.

சூடான் அரசுத்தலைவர், மனித சமுதாயத்திற்கும் மேற்கு சூடானிலுள்ள டார்பூரில் நடத்திய போர்க்காலக் குற்றங்களுக்காவும் அவரைக் கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.