2009-03-09 15:23:33

மார்ச் 10 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


1801 - பிரிட்டனில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது

1876 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைபேசி அழைப்பை வெற்றிகரமாக மேற்கொண்டார். திருவாளர் வாட்சன், இங்கே வாருங்கள், நான் உங்களைப் பார்க்க விரும்புகிறேன் என்று தொலைபேசியில் சொன்னார்.

1893 - ஐவரி கோஸ்ட் பிரெஞ்சு காலனி நாடாகியது.

1922 - கிளர்ச்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகாத்மா காந்தி ஆறாண்டு கால சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் இரண்டாண்டுகளில் அவருக்கு குடல்முளை அறுவை சிகிச்சை நடைபெற்ற பின்னர் 1924ல் விடுதலையானார்.

1948 - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1982 - கோள்கள் அனைத்தும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையில் காணப்பட்டன

1959 - திபெத்தில் பத்தாண்டு கால சீன ஆக்கிரமிப்பை எதிர்த்து லாசா நகரில் நடத்தப்பட்ட போராட்டம் தோல்வியில் முடிந்தது. அதில் ஆயிரக்கணக்கானோர் சீன இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1987 – சோதனைக் குழாய் முறையில் குழந்தை பிறப்பு, வாடகைத்தாய், செயற்கைமுறையில் கருத்தரித்தல் ஆகிய நடவடிக்கைகளை திருப்பீடம் கண்டித்தது.

மார்ச் 10 திருத்தந்தை புனித சிம்பிலிசியோ விழா








All the contents on this site are copyrighted ©.