2009-03-07 14:21:30

வடஇலங்கையில் நடைபெற்றுவரும் மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட ஐ.நா.பொதுச் செயலர் கோரிக்கை


மார்ச்07,2009. வடஇலங்கையில் நடைபெற்றுவரும் மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரியுள்ள அதேவேளை, அங்கு பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது தனக்கு பெரும் கவலை அளிப்பதாகக் கூறியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களில் கணிசமான எண்ணிக்கையில் குழந்தைகள் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்குண்டுள்ளனர்.

இதற்கிடையே போர் இடம் பெறும் பகுதியை விட்டு வெளியேற முயலும் பொதுமக்களுக்காக பாதுகாப்புமிக்க பாதைகளை உருவாக்க தொடர்ந்தும் முயன்று வருவதாகவும், ஆயினும் விடுதலைப் புலிகள் அப்பாதைகளை அடைத்துவிடுகிறார்கள் என்று இலங்கை அரசு சார்பாகப் பேசவல்ல அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றம்சாட்டினார்.

மேலும், வட இலங்கை மோதல்களில் இடம்பெயர்ந்துவருகின்ற மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக இந்திய மருத்துவக் குழு ஒன்று இம்மாதம் 9ஆம் தேதி இலங்கை செல்லவுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.