2009-03-07 14:20:00

எய்ட்ஸ் நோயால் சிறார் இறப்பதைத் தடுப்பதற்கு சர்வதேச காரித்தாஸ் அமைப்பு முயற்சி

 


மார்ச்07,2009. சிறார் எய்ட்ஸ் நோய் தாக்கி இறப்பதைத் தடுப்பதற்கு முயற்சிகள் எடுத்து வரும் சர்வதேச காரித்தாஸ் அமைப்பு, அரசுகளும் மருந்து நிறுவனங்களும் இந்த்த் தனது முயற்சியை நிறைவேற்றுவதற்கு உதவ முடியும் என்று அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

சர்வதேச காரித்தாஸ் அமைப்பின் இணையதளத்தின் வழியாக உலக இளையோர் அரசுகளுக்கும் மருந்கு கம்பெனிகளுக்கும் இது குறித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுள்ளது அவ்வமைப்பு.

ஹைச்சய்வி நோய்க் கிருமிகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்குப் போதுமான சிகிச்சை கொடுக்கப்படாவிட்டால், அக்குழந்தைகளுள் மூன்றில் ஒரு பகுதியினர் பிறந்த முதலாம் ஆண்டுக்குள்ளும், பாதிக் குழந்தைகள் இரண்டாவது ஆண்டுக்குள்ளும் இறப்பார்கள் என்று ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலங்களுக்கான சர்வதேச காரித்தாஸின் பிரதிநிதி பிரான்செஸ்கா மெரிக்கோ கூறினார்.

அரசியல் தலைவர்கள், சிறாரின் நலவாழ்வுக்கான உரிமையை எவ்வாறு பேணி மதிக்கிறார்கள் என்பதை உலகின் சிறாருக்குத் தெரிவிக்க வேண்டுமென்ற விருப்பத்தையும் மெரிக்கோ வெளிப்படுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.