2009-03-06 16:18:24

வாஷிங்டன் மாநிலம் தற்கொலை செய்ய அனுமதிக்கிறது .060309 .


அமெரிக்காவின் வாஷிங்கடனில் மருத்துவ உதவியோடு தற்கொலை புரிய சட்டப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது . வாழ்வைப் போற்றி மதிக்கப் போராட்டம் நடத்துபவர்கள் நோயுற்றோருக்கு இரக்கத்தையும் மனித மாண்பையும் காட்டுமாறு வேண்டுகின்றனர் . விஷமேற்றி தற்கொலை புரியச் சட்டப்படி அனுமதி வழங்கும் 2 ஆவது அமெரிக்க மாநிலமாக வாஷிங்டன் இருக்கிறது . இப்புதிய சட்டப்படி அமெரிக்க மருத்துவர்கள் ஒருவரின் ஆயுள்காலம் இன்னும் 6 மாதம் மட்டுமே எனக் கணக்கிடும்போது அவர் விஷ மருந்தேற்றி தற்கொலை செய்துகொள்ள இச்சட்டம் அனுமதி வழங்குகிறது . இந்தச் சட்டத்தைத் தடுப்பதற்கு வாஷிங்கடனின் ஆயர்கள் குழு அவர்களது இணையதளத்தில் கடவுள்மட்டுமே உயிருக்கு அதிபதி . மனிதர்கள் கடவுளையும் மற்றோரையும் சார்ந்து வாழவேண்டியவர்கள் . கடவுளையும் மற்றோரையும் சாராது தன் சுய விருப்பப்படி உயிரைப்போக்க அதிகாரமில்லாதவர்கள் எனக் கூறியிருந்தனர் . கடவுள் படைப்பின்படி மனிதரின் விலைமதிப்பும் , மாண்பும் எல்லையற்றது எனவும் தெரிவித்திருந்தனர் . முழுமையான வாழ்வு எத்தனை நாள் வாழ்வோம் என்பதைப் பொறுத்தது அல்ல , மாறாக கடவுளின் வாழ்வில் பங்கு பெறும் நாம் வாழ்வின் தொடக்கத்திலிருந்து முடிவுவரை நன்றியுடன் வாழக்கடமைப்பட்டவர்கள் என வாஷிங்டன் ஆயர்குழு தெரிவித்துள்ளது .








All the contents on this site are copyrighted ©.