2009-03-06 16:16:47

யாத் வஷெம் முந்நாள் திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் பற்றி ஆராயும் .060309.


எருசலேத்தில் உள்ள யாத் வஷெம் முந்நாள் திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் பற்றி ஆழமாக ஆராயவுள்ளது . அங்கு இதுபற்றிய 2 வாரக் கருத்தரங்கு நடக்க உள்ளது. யாத் வஷெமி்ல் உள்ள அகில உலக யூதப்படுகொலை ஆய்வு மன்றமும் , சலேசிய துறவு சபை நிறுவனமும் இணைந்து திருத்தந்தை 12 ஆம் பாப்பிறை பற்றியும் , ஷோவா பற்றியும் ஆராய உள்ளனர் . வரலாற்று ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து கருத்தாய்வு நடத்துவார்கள் . யூதப்படுகொலையின் போது திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் மெளனம் காத்தார் என்றும் , சரியான வழிமுறைகளைக் கற்பிக்கவில்லை என்றும் யூத ஆய்வு மன்றம் யாத் வஷெம் கருத்து வழங்கி வருகிறது . இதனால் முந்நாள் திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் பற்றிய சில வாதம் யூதர்களுக்கும் கத்தோலிக்கருக்குமிடையே நிலவி வருகிறது . திருத்தந்தை 12 ஆம் பத்திநாதருக்கு எதிராகக் கூறப்படும் தகவல்களை வரலாற்று நிபுணர்களும் , யூத மத ஆய்வாளர்களும் தவறு எனக் கூறியுள்ளனர் . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவரது எருசலேம் திருப்பயணத்தின்போது யாத் வஷெம் படுகொலைச் சம்பவ ஆய்வகத்திற்குச் செல்லவிருப்பதால் தற்போதைய கருத்தரங்கு தெளிவான கருத்தைப் பெற ஆராய உள்ளதாகத் தெரிகிறது .








All the contents on this site are copyrighted ©.