2009-03-06 16:25:05

திருத்தந்தையின் எருசலேம் பயணம் கிறிஸ்தவர்களுக்கு உதவிடும்,060309.


திருத்தந்தையின் எருசலேம் திருப்பயணம் அங்குள்ள கிறிஸ்தவர்களை அங்கிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் என லத்தீன் ரீதி பிதாப்பிதா போட் ட்வால் தெரிவித்துள்ளார் . சமீபத்தில் காஜாவில் நடந்த மோதல் காரணமாக திருத்தந்தையின் திருப்பயணம் சிரமமான ஒன்று என பிதாப்பிதா போட் ட்வால் மேலும் தெரிவித்துள்ளார் . புனித பூமியில் உள்ள கிறிஸ்தவர்கள் கடவுளையும் , மனிதரையும் , எதிர்காலத்தையும் அதிகம் நம்ப வேண்டியுள்ளது எனக்கூறியுள்ளார் . திருத்தந்தையின் மே மாதம் 8 லிருந்து 15 தேதி வரை புனிதபூமி திருப்பயணம் கிறிஸ்தவர்களுக்கு இந்த நம்பிக்கையைத் தரும் என எருசலேத்தின் லத்தீன் ரீதிப் பிதாப்பிதா தெரிவித்துள்ளார் . இதற்கிடையில் கிறிஸ்தவ ஐக்கியக் குழு அங்குச் சென்று அமைதிப்பேச்சுக்கு வழி செய்ய உள்ளது . கிறிஸ்தவர்களுக்குத் தேவையான குடியிருப்புக்களை அமைக்கவும் , கல்விக்கு வழிசெய்யவும் துணைசெய்ய உள்ளது . இதனை உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் எடுத்துச் செய்ய உள்ளது .








All the contents on this site are copyrighted ©.