2009-03-05 15:21:05

மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு உதவி, 050309


மீட்பின் வரலாற்றிலும் மீட்பின் பூகோளத்திலும் இஸ்ராயேல் இடம் பிடித்திருப்பதாகக் கூறுகிறார் பேராயர் மிலியோரே . வத்திக்கான் திருப்பீடத்தின் ஐ.நா சபைக்கான நிரந்தர உறுப்பினர் பேராயர் செலஸ்டீனோ மிலியோரே .



மத்திய கிழக்கு நாடுகளில் குறைந்துவரும் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு உதவ அமெரிக்காவின் மீஷீகனில் நடந்து வரும் கருத்தாய்வில் கலந்து கொண்டு கருத்து வழங்கினார் பேராயர் . மத்திய அரேபிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் திருச்சபைகளின் கருத்தரங்கை அங்குள்ள கல்தேய சபை நடத்துகிறது. இருட்டறையில் சந்திக்கும் நபர்களாக கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இருப்பதாக அவர் தெரிவித்தார் . மேலும் திருச்சிலுவைப் போர்க்கால பூதங்களாக இஸ்லாமியர் கிறிஸ்தவர்களை நோக்குவதாக அவர் கூறினார் . கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை சமயச் சகிப்புத்தன்மை இல்லாதவர்களாக நோக்குவதாக அவர் மேலும் தெரிவித்தார் .

கிறிஸ்தவ சமய வரலாற்றில மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்கள் முக்கியமானவர்கள் என வத்திக்கான் கருதுவதாகப் பேராயர் தெரிவித்தார் . அவர்களுடைய கல்வி , மருத்துவம் , சமூக சேவைகளால் நல்ல தாக்கத்தை அப்பகுதியில் கிறிஸ்தவர்கள் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். மதச்சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்கும் அவர்கள் எடுத்துள்ள முயற்சிகளையும் பேராயர் பாராட்டினார் . அப்பகுதியில் 7 விழுக்காடே வாழும் கிறிஸ்தவர்களுக்கு அமைதியில் வாழ்வதற்கு பொருளாதார , ஆன்மீக , அரசியல் உதவி தேவை என கருத்தரங்கில் பேசப்பட்டது .








All the contents on this site are copyrighted ©.