2009-03-05 15:27:07

திருத்தந்தையின் புனித தலத் திருப்பயணம் . 050309 .


இஸ்ராயேலில் உள்ள புனித தலங்களுக்கு வரும் மேத்திங்கள் செல்லும் திருத்தந்தை பல் சமய கலந்துரையாடலை வலியுறுத்துவார் எனத் தெரிகிறது .

வரும் மேமாதம் 11 லிருந்து 15 வரை திருத்தந்தை புண்ணியபூமியில் திருப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் . இதுபற்றி வத்திக்கான் திருப்பீடமோ , இஸ்ராயேல் நாட்டு அதிகாரிகளோ இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை . இஸ்ராயேலில் இருந்து வெளிவரும் ஒரு கிறிஸ்தவ செய்தி மடல் இதுபற்றி சரியான ஆதாரம் இல்லாத செய்தியை அளித்துள்ளது . மேமாதம் 11 ஆம் தேதி இஸ்ராயேல் குடியரசுத்தலைவர் ஷிமன் பெரஸ் திருத்தந்தையை வரவேற்பார் .



திருத்தந்தையின் பயணத்தின்போது யத்வாசம் படுகொலை நினைவகத்துக்குச் செல்வார் திருத்தந்தை . அங்கு இஸ்ராயேல் மற்றும் பாலஸ்தீன அதிகாரிகளால் வரவேற்கப்படுவார் . பின்னர் எருசலேத்தின் யூதத் தலைவர் மப்டியைச் சந்திப்பார் திருத்தந்தை . கடவுளிடம் அழுது புலம்பும் சுவருக்குச் செல்லும்போது முக்கிய குருமார்கள் திருத்தந்தையைச் சந்திப்பார்கள் . இரண்டாம் நாள் எருசலேத்தின் இயேசுவின் இறுதி இராவுணவு அறைக்குச் செல்வார் திருத்தந்தை . பின்னர் லத்தீன் ரீதி பிதாப்பிதாவையும் கத்தோலிக்கக் குருமார்களையும் சந்திப்பார் . ஜெத்சமனித் தோட்டத்துக்குச் சென்று திருப்பலி நடத்துவார் . மேமாதம் 13 ல் பெத்லகேம் செல்வார் . மே 14 கில் நாசரேத்தில் திருப்பலி நிகழ்த்தி சமயத்தலைவர்களைச் சந்திப்பார் . மேமாதம் 15 ல் எருசலேத்தின் ஆர்த்தோடாக்ஸ் பிதாப்பிதாவைச் சந்திப்பார் .பின்னர் இயேசுவின் புனித கல்லறையில் செபம் செய்வார் . அங்குள்ள ஆர்மீனியன் ஆர்த்தோடாக்ஸ் பிதாப்பிதாவைச் சந்தித்துப் பேசிய பிறகு பிற்பகல் 2 மணிக்கு உரோமைக்குப் பயணமாவார் எனத் தெரிகிறது .








All the contents on this site are copyrighted ©.