2009-03-02 15:25:31

வானதூதர்களை நாம் உதவிக்கு அழைக்க வேண்டும்,திருத்தந்தை.020309


இவ்வாரம் ஞாயிறு நண்பகல் மூவேளை ஜெபத்துக்கு முன்னர் திருத்தந்தை மறைபோதகம் வழங்கியபோது வானதூதர்கள் நற்செய்தியில் முக்கிய இடம் வகிப்பதாகக் கூறினார் . வானம் மூட்டமாக , மழைச் சாரல் வீழ்ந்து கொண்டும் இருந்தது . வழக்கம் போல ஆயிரக்கணக்கான மக்கள் உரோமை ஆயராகிய திருத்தந்தையின் மறைபோதகம் கேட்டு மூவேளை செபம் செய்ய வந்து கூடியிருந்தனர் . தவக்காலத்தின் முதல் ஞாயிறு வாசகங்களுக்கு விளக்கம் கொடுத்த திருத்தந்தை , பாவம் செய்யாத இயேசு , பாவம் செய்ய இயலாத இயேசு ,சோதிக்கப்படுவதற்குத் தம்மைக் கையளித்து , நம் பலவீனங்களில் நம்மீது இரக்கம் காட்டுகிறார் . மனிதர்கள் மீட்புப்பெறுவதைத் தொடக்கத்திலிருந்து எதிர்த்த சாத்தான் என்னும் எதிரி தம்மையும் சோதிக்க இயேசு சம்மதித்தார் என்றார் திருத்தந்தை . இந்தத் தெளிவற்ற இருள் ஆர்ந்த சாத்தான், இயேசுவைச் சோதிக்கும் வேளை ஒளி நிறைந்த வானதூதர்களும் இயேசுவுக்கு ஆறுதலாகச் சேவை செய்ததாகக் கூறப்பட்டுள்ளது . விவிலியத்தின் பழைய ஏற்பாட்டு நூலிலும் , நற்செய்தி நூலிலும் பல இடங்களில் வானதூதர்கள் தோன்றுவதை திருத்தந்தை எடுத்துக் கூறினார் . கடவுள் பெயரால் வானதூதர்கள் மக்களுக்கு உதவிகள் புரிவதாகத் திருத்தந்தை கூறினார் . பழைய ஏற்பாட்டில் தோபியா நூலிலும் , நற்செய்தியில் சக்கரியாவுக்குக் குழந்தைப்பேறு பற்றி அறிவித்தல் , மரியாவுக்கும் இயேசுவின் பிறப்புப் பற்றி அறிவித்தல் , குழந்தை இயேசு பிறந்ததும் இடையர்களுக்கு நற்செய்தியை அறிவித்தல் , இயேசுவின் உயிர்த்தெழுதலை மகளிருக்கு அறிவித்தல் போன்ற வானதூதர்களின் பிரசன்னம் பற்றி திருத்தந்தை எடுத்துக்கூறினார் . நாமும் அவர்களுடைய உதவியை நாடுவோம் என்றும் ,முக்கியமாக வத்திக்கான் செயலகத்தில் உள்ளோர் ஆன்மீகப் பயிற்சியில் ஆழ்ந்த செபத்தில் இந்த வாரம் முழுவதும் செலவிடும்போது தமக்காகவும் மற்றோருக்காகவும் செபிக்குமாறும் திருத்தந்தை வேண்டிக்கொண்டார் .








All the contents on this site are copyrighted ©.