2009-03-02 15:34:25

திருமுழுக்குப் பற்றி நாம் பெருமை கொள்வோம்,கர்தினால் ரைல்கோ. 020309


நமது திருமுழுக்குப் பற்றி நாம் பெருமை கொள்ளவேண்டும் என்கிறார் கர்தினால் ஸ்தனிஸ்லாஸ் ரைல்கோ . கர்தினால் ரைல்கோ வத்திக்கான் திருப்பீடத்தின் பொது நிலைக் கிறிஸ்தவ மக்கள் மன்றத் தலைவராக இருக்கிறார் . உரோமையில் உள்ள திருப்பீடத்தின் கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் முந்நாள் திருத்தந்தையின் சுற்றறிக்கை பற்றி சென்ற சனிக்கிழமை கர்தினால் ரைல்கோ உரை நிகழ்த்தினார் . 20 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் கத்தோலிக்கப் பொது நிலைக் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்திபிதலெஸ் லயிச்சி என்ற சுற்றுமடல் வரைந்திருந்தார் . பொது நிலைக் கிறிஸ்தவர்களின் இறை அழைப்பு மற்றும் நற்செய்திப்பணியில் அவர்களின் பங்கேற்றல் பற்றி அந்தச் சுற்று மடல் விளக்கம் தந்திருந்தது . அச்சுற்றுமடல் திருச்சபையின் பணியில் முழுமையாகக் கவனம் செலுத்தி தத்தமது அலவல்களை மறந்துவிடுவதையும் மற்றும் சமூகப் பொருளாதாரச் சூழலை மறந்து வாழ்வதையும் , அதே சமயம் இறை விசுவாசத்தையும் , வாழ்வையும் பிரித்து நோக்குவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் கூறியிருந்தது . பொதுநிலை மக்களின் தனிச்சிறப்பு திருமுழுக்கிலிருந்து வருவதாகக் கர்தினால் தெரிவித்தார் . நம்முடைய திருமுழுக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்து நாம் பெருமை கொள்ளவேண்டும் எனக் கர்தினால் ஸ்தனிஸ்லாஸ் ரைல்கோ தம் உரையில் தெளிவுபடுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.