2009-02-27 19:35:10

தலித் கிறிஸ்தவ மக்களுக்குச் சம உரிமை கோரி தில்லியில் போராட்டம். 2702 .


இந்திய தலித் கிறிஸ்தவ மக்களுக்கு பிற சமய தலித் மக்களைப் போல சம உரிமை கோரி தில்லியில் இவ்வாரம் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது . மைய அரசு தலித் கிறிஸ்தவ மக்களுக்குத் தரவேண்டிய சலுகைகளைக் காலதாமதப்படு்த்துவதை கலந்து கொண்டவர்கள் கண்டித்துள்ளனர் . இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் குழுவின் தலைவர் பேராயர் ஸதனிஸ்லாஸ் பெர்னாண்டஸ் , தில்லியின் பேராயர் வின்செண்ட் கொன்செஸ்சாவோ, மற்றும் மற்ற கிறிஸ்தவ சமயத்தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கிறிஸ்தவ தலித் சலுகைகள் நிலவரம் பற்றிய செய்தியை வழங்கினர் . நீதிபதி இரங்கநாத மிஸ்ரா கமிஷன் அறிக்கையை வெளியிடுமாறும் , அவர் தந்துள்ள பரிந்துரைகளை அமல்படுத்துமாறும் , உச்ச நீதி மன்றத்தின் கேள்விகளுக்குக் காலதாமதப்படுத்தாமல் பதில் கொடுக்குமாறும் , தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு பிற சமய தாழ்த்தப்பட்ட மக்களுக்குள்ள சம உரிமைகளை வழங்குமாறும் அரசை வலியுறுத்தியுள்ளனர் . எல்லா அரசியல் கட்சிகளும் இந்த வேண்டுகோள்களுக்கு ஆதரவு தந்துள்ளன . இப்போதைய பாரதப்பிரதமரும் , முந்தைய பிரதமர்களும் அமல் படுத்துவதாக வாக்குறுதி கொடுத்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை என்பதுதான் நிலவரம் . மைய அரசு உடனடியாக ஆவன செய்யுமாறு போராட்டத்தில் வற்புறுத்தப்பட்டுள்ளது .








All the contents on this site are copyrighted ©.