2009-02-27 19:32:44

கத்தோலிக்கர்களும் இஸ்லாமியரும் அமைதியை நிலைநாட்டத் திட்டம்.2702.


இவ்வாரம் செவ்வாய் , புதன் ( பிப். 23 ,24 ) தினங்களில் இரு சமயத்தவரும் இணைந்து உரோமையில் சமயக் கலந்துரையாடல் நடத்தினர் . வத்திக்கான் திருப்பீடத்தின் சமயக் கலந்துரையாடல் மன்றமும் கெய்ரோவை மையமாகக்கொண்ட அல் அஷார் என்ற இஸ்லாமியக் கழகமும் கலந்து பேசினர் . கத்தோலிக்கக் குழுவின் தலைவராகிய கர்தினால் ஜான் லூயி தவுரானும் , இஸ்லாமியக் குழுவுக்குத் தலைவராக இருந்த சேக் அலி ஷகாத்தாவும் இணைந்து 8 முடிவுகளை வெளியிட்டுள்ளனர் . உலகில் அமைதியும் பாதுகாப்பும் தேவை என வலியுறுத்தியுள்ளனர் . கற்பித்தல் வழியாகவும் போதனை வழியாகவும் இரு குழுக்களும் தத்தமது மக்களுக்கு அமைதிக்கான கலாச்சாரத்தை வழங்க உறுதி பூண்டுள்ளனர் . செய்தித் தொடர்பு சாதனங்களும் இதில் முக்கிய பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளனர் . நல்ல உறவுகளை வளர்ப்பதையும் , மனித உரிமைகளைக் காப்பதையும், மனித மாண்பைப் போற்றுவதையும் , தனிமனித மற்றும் சமயச் சுதந்திரத்தையும் வலியுறுத்தினர் . மேலும் உண்மையோடும், நீதியோடும் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதிக்கு வழிவகுக்க முயற்சிகளை அதிகப்படுத்த திட்டமிட்ட உள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.