2009-02-25 14:59:11

குடிமக்கள் தாங்கள் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் அவர்கள் சார்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து கேள்விகள் கேட்டு அவைகளை தெளிவாக ஆராய பிரிட்டன் பேராயர் ஒருவர் வலியுறுத்தல்


25பிப்.2009. உலகம் முழுவதும் சமுதாயங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்வேளை, குடிமக்கள் தாங்கள் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் அவர்கள் சார்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து கேள்விகள் கேட்டு அவைகளை தெளிவாக ஆராயுமாறு பிரிட்டன் பேராயர் ஒருவர் வலியுறுத்தினார்.

பிரிட்டனில் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சுமுகமாக்குவதற்கு அதிகப் பணத்தாள்கள் அச்சிடுவது குறித்த பேச்சுகள் எழுந்துள்ளதையடுத்து இவ்வாறு உரைத்தார் லிவர்பூல் அந்நகர் பேராயர் பாட்ரிக் கெல்லி.

இத்தகைய திட்டங்களைப் புதிய கைத்திறன் என்று பெயரிட்டுள்ள அவர், இது, மேலும் ஆபத்துக்களைப் பரப்புவதாக இருக்கின்றது என்று அரசைக் குறை கூறியுள்ளார்.

இத்தகைய ஆபத்து, கடன்களைக் குவிக்கும் மற்றும் எதிர்மறை விலைவுகளையே ஏற்படுத்தும் என்று லிவர்பூல் மக்களுக்கென நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் பேராயர் கெல்லி. இந்நெருக்கடி நேரங்களில் ஒளிவுமறைவில்லா பேச்சு, நேர்மை, ஒருங்கிணைந்த வாழ்வு தேவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்







All the contents on this site are copyrighted ©.