2009-02-25 15:03:40

உலகின் வளங்களையும் குறிப்பாக தண்ணீரையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுவது குறித்து சிந்திப்பதற்குத் தவக்காலம்


25பிப்.2009. உலகின் வளங்களையும் குறிப்பாக தண்ணீரையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுவது குறித்து சிந்திப்பதற்குத் தவக்காலம் ஏற்ற காலம் என்று ஜெனீவாவிலுள்ள கிறிஸ்தவ சபைகள் மன்றம் கூறியது.

இப்புதனன்று தொடங்கும் இத்தவக்காலத்தில் உலகின் வளங்கள் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுவது குறித்து தியானிக்கவும் அதற்கான நடவடிக்கை எடுக்கவும் கிறிஸ்தவர்களைத் தூண்டுவதற்கு இந்த கிறிஸ்தவ தண்ணீர் கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் மார் 22ம் தேதி சர்வதேச தண்ணீர் தினம் ஐ.நா.வால் கடைபிடிக்கப்படுவதையொட்டி தண்ணீர் குறித்த விழிப்புணர்வை மக்கலிடையே ஏற்படுத்த கடந்த ஆண்டு தவக்காலத்தில் முதன் முறையாக இக்கூட்டமைப்பு நடவடிக்கையில் இறங்கியது.

தற்போதைய நிலைமை தொடருமானால் 2025ம் ஆண்டிற்குள் ஏறத்தாழ 118 கோடிப்பேர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்குவர். இன்னும், உலகின் மூன்றில் இரண்டு பகுதியினர் நீர் வளங்கள் இன்றி கஷ்டப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.










All the contents on this site are copyrighted ©.