2009-02-24 15:15:30

மத்திய கிழக்குப் பகுதியின் கிறிஸ்தவ சமூகம், அப்பகுதிக்கான ஆன்மீக மேம்பாட்டிற்கான குறிப்பிடத்தக்க உறுதிப்பாடு, திருப்பீடச் செயலர்


24பிப்.2009. மத்திய கிழக்குப் பகுதியின் கிறிஸ்தவ சமூகம், அப்பகுதிக்கான உண்மையான கொடை மட்டுமல்ல, சமூக கலாச்சார மற்றும் ஆன்மீக மேம்பாட்டிற்கான குறிப்பிடத்தக்க உறுதிப்பாடு என உரோம் நகரில் இடம் பெற்ற கிறிஸ்தவ-இசுலாம் மதங்களுக்கிடையேயான கூட்டத்திற்குத் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே செய்தி அனுப்பியுள்ளார்.

உரோம் நகர் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பான சான் எஜிதியோ குழு ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்தவ-இசுலாமிய கலந்துரையாடல் கூட்டத்திற்குத் திருப்பீடச் செயலர் அனுப்பிய செய்தி, இசுலாமிய சமூகத்திடையே சிறுபான்மையினராக வாழும் கிறிஸ்தவர்கள் பற்றிய மதிப்பீடுகள் பற்றியதாக இருந்தது.

ஒரே இறைவனால் படைக்கப்பட்ட இவ்விரு சமய மக்களும் தாங்கள் ஒருவர் மற்றவர் மீதான மதிப்பு, ஒருமைப்பாடு என்பவைகள் மூலம் ஒன்றிணைந்து நிறைய சாதிக்க முடியும் என்ற திருத்தந்தை 16ம் பெனடிக்டின் வார்த்தைகளையும் கர்தினால் பெர்த்தோனேயின் செய்தி, கோடிட்டுக் காட்டுகிறது.

மத்திய கிழக்குப் பகுதி பேச்சுவார்த்தைகள் சகோதரத்துவ ஒத்துழைப்பின் பூமியாக விளங்க வேண்டும் என்ற திருத்தந்தையின் ஆவலும் கர்தினாலின் செய்தியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.