2009-02-21 15:32:19

கத்தோலிக்கத் திருச்சபையின் நடவடிக்கைகள் அரசியல் நோக்கம் கொண்டதாய் இருக்காது, திருப்பீட பிரதிநிதிகள்


21பிப்.2009. கத்தோலிக்கத் திருச்சபையின் நடவடிக்கைகள் அரசியல் நோக்கம் கொண்டதாய் இருக்காது என்று திருப்பீட பிரதிநிதிகள் குழு வியட்னாம் அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தது.

வியட்னாமுடன் முழு அரசியல் உறவை உருவாக்கும் வாய்ப்புக்கள் குறித்து அந்நாட்டு அரசு அதிகாரிகளுடன் இம்மாதம் 16,17 தேதிகளில் கூட்டங்களை நடத்திய வத்திக்கான் நாட்டு நேரடிச் செயலர் பேரருட்திரு பியத்ரோ பரோலின் தலைமையிலான திருப்பீட குழு இவ்வாறு கூறியது.

வியட்னாம் சமய விவகாரக் குழு, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை, இன்னும் தாய்பின், புய்ஹூ ஆகிய மறைமாவட்டங்களையும் இத் திருப்பீட குழு சந்தித்து என்று இச்சுற்றுப்பயணம் பற்றிய அறிக்கை கூறியது.

1970களில் வியட்னாம் கம்யூனிச அரசு, கத்தோலிக்கத் திருச்சபையிடமிருந்து அதன் மருத்துவமனைகள், பள்ளிகள், இன்னும்பிற சொத்துக்களை பறிமுதல் செய்ததால் திருச்சபையின் பிறரன்பு தொடர்புடைய பணிகளில் கத்தோலிக்கர்கள் பங்கு கொள்வது கடினமாக அமைந்தது.








All the contents on this site are copyrighted ©.