2009-02-21 15:34:16

2009ல் ஆசியாவில் குறைந்தது 72 இலட்சம் வேலைகள் இல்லாமல் போகும் அபாயம்


21பிப்.2009. தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு இந்த 2009ம் ஆண்டில் ஆசியாவில் குறைந்தது 72 இலட்சம் வேலைகள் இல்லாமல் போகும் வேளை, 9 கோடியே 30 இலட்சம் முதல் 11 கோடியே 30 இலட்சம் பேர் வரை வேலையில்லாமல் இருப்பர் என்று சர்வதேச தொழில் நிறுவனம் இவ்வாரத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.

2009ல் 2 கோடியே 23 இலட்சம் வேலைகள் இழப்பு உட்பட 2007 முதல் 2009ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 5 கோடி வேலைகள் இழப்பு ஏற்படக்கூடும் என்று அவ்வறிக்கை எச்சரித்தது.

தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு மலேசியா, தென்கொரியா, தாய்லாந்து போன்ற பல நாடுகள் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வேலைக்கான அனுமதி கொடுப்பதை நிறுத்தியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.