2009-02-20 19:09:36

கென்ய நாட்டில் கடத்தப்பட்ட சகோதரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 200209.


கென்ய நாட்டில் கடத்தப்பட்ட அருள் சகோதரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் . சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி பயங்கர ஆயுதங்களோடு வந்த தீவிரவாதிகள் கடத்திய இரண்டு இத்தாலிய நாட்டைச் சேர்ந்த சகோதரிகள் இந்த வியாழன் அன்று விடுவி்க்கப்பட்டுள்ளது பற்றி வத்திக்கான் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது . இந்தச் செய்தியை வரவேற்ற வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் தந்தை பெடரிக்கோ லொம்பார்டி உலகின் பல பகுதிகளில் மக்கள் கடத்தப்படுவது பற்றி வருத்தம் தெரிவித்தார் . இது அரசியல் யுத்தியாகப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார் . சகோதரி கத்தரீனா ஜிராடோவும், வயது 67 , சகோதரி மரிய தெரசாவும் வயது 61 கென்யாவின் சோமாலிய எல்லையில் சென்ற ஆண்டு கடத்தப்பட்டனர் . இவர்கள் இருவரும் இத்தாலியின் குனேயோ நகரைச் சேர்ந்தவர்கள் . இவர்களில் தெரசா 1972 லிருந்தும் , கத்தரீனா 74 லிருந்தும் கென்யாவில் பணிபுரிந்து வந்தனர் . இவர்களை விடுவிக்குமாறு திருத்தந்தை சென்ற நவம்பர் 27 லிலும், டிசம்பர் 26 ஆம் தேதியும் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .








All the contents on this site are copyrighted ©.