2009-02-20 18:56:10

இலத்தீன் அமெரிக்க நற்செய்திப்பணியை ஊக்குவிக்கிறார் திருத்தந்தை.2002.


இலத்தீன் அமெரிக்க பெருநிலப்பகுதி முழுவதும் நற்செய்தி அறிவிப்புப் பணியை உற்சாகத்தோடு செய்யுமாறு திருத்தந்தை அப்பகுதியின் குரு மாணவர்களையும் குருக்களையும் ஊக்குவித்தார் . உரோமையில் உள்ள வத்திக்கான் திருப்பீடத்தின் இலத்தீன் அமெரிக்கப் பயஸ் கல்லூரி அதன் 150 ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகிறது . அக்கல்லூரியின் பிரதிநிதிகள் சிலர் இவ்வியாழனன்று திருத்தந்தையைச் சந்தித்துப் பேசினர் . இலத்தீன் அமெரிக்காவிலும், கரீபியன் தீவிலும் உள்ள கிறிஸ்தவர்கள் உரோமைத் திருச்சபையோடு கொண்டுள்ள நெருங்கிய உறவைத் திருத்தந்தை பாராட்டினார் . 2007 ஆம் ஆண்டு திருத்தந்தை அப்பாராசீதாவுக்கு திருப்பயணம் சென்றிருந்ததை நினைவு கூர்ந்தார் . அங்குள்ள ஆயர்களின் ஒற்றுமையைத் திருத்தந்தை பாராட்டினார் . அங்குள்ள கிறிஸ்தவ மக்கள் அனைவரும் இயேசுக் கிறிஸ்துவின் சீடர்களாகவும் , தூதர்களாவும் செயல்பட அவர்களை ஊக்குவிக்குமாறு ஆயர்களை கேட்டுக்கொள்வதாகத் திருத்தந்தை கூறினார் .

அங்குள்ள கிறிஸ்தவ குழுக்கள் கிறிஸ்தவ வாழ்வு மதிப்பீடுகளைப் பின்பற்ற பணித்தளங்களில் வழிகாட்டுமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார் . புதிய மறைபரப்புப் பணி சிறப்பாகச் செயல்பட்டு இறைமக்கள் கிறிஸ்துவின் சீடர்களாக, அவரைப் பின்பற்றிடச் செபிக்குமாறு இலத்தீன் அமெரிக்கப் பயஸ் கல்லூரியின் பிரதிநிதிகளைத் திருத்தந்தை கேட்டுக்கொண்டார் .








All the contents on this site are copyrighted ©.