2009-02-19 15:43:52

பிரிட்டன் பிரதமர் கோர்டன் ப்ரவுன், திருத்தந்தை சந்திப்பு


19பிப்.2009. பிரிட்டன் பிரதமர் கோர்டன் ப்ரவுன் இன்று காலை திருத்தந்தை 16ம் பெனடிக்டை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் என்று திருப்பீடம் அறிவித்தது.

திருத்தந்தையை சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மாம்பெர்த்தி ஆகியோரை தனது பிரதிநிதி குழுவுடன் பிரிட்டன் பிரதமர் ப்ரவுன் சந்தித்தார் என்றும் திருப்பீடம் அறிவித்தது

தற்போதைய உலக பொருளாதார நெருக்கடி, வளர்ச்சி குன்றிய நாடுகளுக்குப் பயன்தரும் வகையில் நடவடிக்கைகளை எடுத்தல், மனித முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலைத்த வளர்ச்சி போன்ற திட்டங்கலில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல் ஆகிய தலைப்புகள் பற்றி இச்சந்திப்புகளில் கருத்துக்கள் பகிரப்பட்டன என்றும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.

மேலும், தொடர்ந்து சம்டை இடம் பெறும் பகுதிகளில், குறிப்பாக மத்திய கிழக்குப் பகுதியில் அவற்றை நிறுத்துவதற்கு சர்வதேச சமுதாயம் தொடர்ந்து அர்ப்பணத்தோடு செயல்படும் என்ற நம்பிக்கையும், இச்சந்திப்புகளில் தெரிவிக்கப்பட்டது.

பிரிட்டனுக்கும் திருப்பீடத்திற்குமிடையேயான பல காரியங்கள், குறிப்பாக அந்நாட்டு கத்தோலிக்க சமுதாயம் பற்றியும் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன என்றும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் தெரிவித்தது.

இது, பிரதமர் ப்ரவுனுக்கும் திருத்தந்தைக்கும் இடையே இடம் பெறும் மூன்றாவது சந்திப்பாகும். எனினும் அவர் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இடம் பெறும் முதல் சந்திப்பாகும்







All the contents on this site are copyrighted ©.