2009-02-19 15:52:06

பிப்ரவரி 20 வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


1431 – திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் இறந்தார்.

1547 - ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1627 - யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.

1759 – மனநோய் மருததுவத்தைத் தொடங்கிய ஜெர்மன் மருத்துவர் ஜோன் கிறிஸ்டியன் ரெய்ல் பிறந்தார்.

1798 - திருத்தந்தை ஆறாம் பத்திநாதர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1835 - சிலியின் கொன்செப்சியோன் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.

1910 - எகிப்தியப் பிரதமர் பூட்ரோஸ் காலி கொல்லப்பட்டார்.

1944 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா எனிவெட்டொக் தீவைக் கைப்பற்றியது.

1947 - புரூசியா நாடு கலைக்கப்பட்டது.

1962 - மெர்க்குரி திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.

1965 - அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.

1976 – தென்கிழக்கு ஆசிய உடன்பாட்டு நிறுவனம் கலைக்கப்பட்டது.

1987 - அருணாசலப் பிரதேசம் அஸ்ஸாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.

2002 - எகிப்தில் பேரூந்து ஒன்று தீப்பிடித்ததில் 370 பேர் கொல்லப்பட்டனர்.

பிப்ரவரி 20 முத்திப்பேறுபெற்ற பிரான்சிஸ்கோ மற்றும் ஜசிந்தா விழா. இவர்கள் போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில் அன்னைமரியைக் காட்சியில் கண்டவர்கள். அக்காட்சியில் அன்னைமரி அவர்களிடம், சமாதானத்திற்காகச் செபமாலை சொல்லவும், திருத்தந்தைக்காவும் பாவிகளுக்காவும் இரஷ்யர்களின் மனமாற்றத்திற்காகவும் செபிக்கவும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.