2009-02-18 14:41:06

வெனேசுவேலா பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு குறித்து தங்கள் தலத்திருச்சபைத் தலைவர்கள் கவலை


18பிப்.2009. வெனேசுவேலா நாட்டில் அரசுத்தலைவரின் பதவிக் காலத்தை வரையறை செய்வதை நீக்குவதற்கு பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு ஆதரவு அளித்துள்ளது குறித்தத் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு தலத்திருச்சபைத் தலைவர்கள்.

தென் அமெரிக்க நாடான வெனேசுவேலா அரசுத்தலைவர் ஹூகோ சாவேஸ், ஏற்கனவே பத்தாண்டுகளாகப் பதவியிலிருக்கும் வேளை, அடுத்து 2012ம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் பதவியைத் தக்க வைத்தால் அது நாட்டிற்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று கரகாஸ் துணை ஆயர் ஹேசுஸ் கொன்சாலெஸ் கூறினார்.

பதவியில் இருப்பவர் தேர்தலில் மிகுந்த செல்வாக்கைப் பெறுவதற்கு மிகுந்த வாய்ப்புக்களை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.