2009-02-18 14:42:02

பாலியல் வியாபாரத்தில் மனிதர் பொருட்களாகப் விற்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும், மும்பை சர்வதேச கூட்டம்


18பிப்.2009. பாலியல் வியாபாரத்தில் மனிதர் பொருட்களாகப் விற்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் மற்றும் இவ்வியாபாரத்திற்கான மூலக்காரணம் கண்டுபிடிக்கப்படுவது மிகவும் அவசியம் என்று மும்பையில் நடைபெற்ற சர்வதேச கூட்டத்தில் கூறப்பட்டது.

ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக அவையோடு அதிகாரப்பூர்வமாக இணைந்து வேலைசெய்யும் யுஎன்அனிமா என்ற சர்வதேச அரசுசாரா அமைப்பு, மும்பையில் நடத்திய கூட்டத்தில் பேசிய அருட்சகோதரி பெட்டீரிசியா முல்கால், எல்லாம் வல்ல இறைவனில் நாம் நம்பிக்கை வைப்பதால், அனைவரும் இணைந்து பாலியல் வியாபாரத்தைத் தடைசெய்ய ஆவன செய்ய வேண்டும் என்றார்.

இந்தியாவின் கிராமங்களிலிருந்து முக்கிய நகரங்களுக்குத் தினமும் 200 சிறுமிகள் வீதம் கொண்டுவரப்படுகின்றனர், இவர்களில் 80 விழுக்காட்டினர் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக விபச்சாரத்தில் உட்படுத்தப்படுகின்றனர் என்றார் அவர்.

உலக அளவில் நாட்டிற்குள்ளே அல்லது வேறு நாடுகளுக்கு ஆண்டுதோறும் 12 இலட்சம் இந்தப் பாலியல் வியாபாரத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் என்ற அவர், இவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்கள் மற்றும் 20 விழுக்காட்டினர் சிறார் என்றும் கூறினார்.

உலகில் மிகுந்த வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் தொழிலில் பாலியல் வியாபாரம் மூன்றாவது இடத்தை வகிப்பதாக இக்கூட்டத்தில் கூறப்பட்டது. இதில் 6 நாடுகளின் 65 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

யுஎன்அனிமா என்ற சர்வதேச அரசுசாரா அமைப்பு, 2002இல் 16 பெண் துறவிகள் சபைகளால் தொடங்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.