2009-02-18 14:38:56

உலக அளவில் ஏழ்மையை ஒழிப்பதற்கென அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத்திருச்சபை புதிய நடவடிக்கை


18பிப்.2009. உலக அளவில் ஏழ்மையை ஒழிக்கும் முயற்சிகளில் 10 இலட்சம் கத்தோலிக்கரை ஈடுபடுத்தும் நோக்கத்தில் இம்மாதம் 23ம் தேதி புதிய நடவடிக்கை ஒன்றைத் தொடங்கவுள்ளது அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத்திருச்சபை.

மனித மாண்பையும் மனித வாழ்வையும் பாதுகாப்பதற்கும் வறுமையை ஒழிப்பதற்குமென அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையும், அப்பரேவையின் நிவாரணப்பணி அமைப்பும் இணைந்து, வருகிற திங்களன்று “கத்தோலிக்கர் உலக ஏழ்மையை ஒழிக்க முயற்சி” எனும் தலைப்பில் புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கவுள்ளனர்.

உலகின் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள தனிப்பட்டவர்களின் நிலை குறித்த விபரங்களும் ஏழ்மைக்கெதிரான செயல்களும் பதிவுசெய்ய இப்புதிய இணையதளம் அனைவருக்கும் அழைப்புவிடுக்கின்றது.








All the contents on this site are copyrighted ©.