2009-02-17 16:13:21

பிறப்பு பற்றிய புதிய எல்லைகள் மற்றும் இன ஆக்க மேம்பாட்டியலின் ஆபத்துக்கள் குறித்து இம்மாதம் 20, 21 தேதிகளில் வத்திக்கானில் கூட்டம் நடைபெறவுள்ளது


17பிப்.2009. பிறப்பு பற்றிய புதிய எல்லைகள் மற்றும் இன ஆக்க மேம்பாட்டியலின் ஆபத்துக்கள் குறித்து இம்மாதம் 20, 21 தேதிகளில் வத்திக்கானின் புதிய ஆயர் மன்ற அரங்கில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் பற்றி இன்று நிருபர் கூட்டத்தில் விளக்கியது திருப்பீடம்.

திருப்பீட வாழ்வு கழகம் நடத்தவுள்ள இந்த அதன் 25வது பொதுக் கூட்டம் பற்றி அக்கழகத் தலைவர் பேராயர் ரீனோ பிஷிகெல்லா, அதன் சான்சிலர் பேரருட்திரு இஞ்ஞாசியோ கராஸ்கோ தெ பவுலா, உரோம் லா சப்பியன்சா பல்கலைக்கழக பிறப்பு பற்றிய மருத்துவப் பேராசிரியர் புருனோ தல்லாபிக்கோலா ஆகிய மூவரும் நிருபர்களிடம் விளக்கினர்.

மனிதனின் பிறப்பு குறித்த சட்டரீதியிலான உயிரியல்மருத்துவம், அதன் மெய்யியல், இறையியல் மற்றும் சமூகக் கூறுகள் தொடர்புடைய பல பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதில் கலந்து கொள்வார்கள் என்று பேராயர் பிஷிகெல்லா கூறினார்.

கடந்த பத்து ஆண்டுகளில் இடம் பெற்றுள்ள ஆய்வுகள், குறிப்பாக மனித மரபணுக்கள் பற்றி நடத்தப்பட்டுள்ள ஹூயுமன் ஜெனோம் ஆய்வுகள் குறித்தத் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்த அவர், ஆயிரக்கணக்கான மரபணுக்களை இனம் காண முடியும், இதன் மூலம் பலவகையான நோய்கள் பற்றிப் புரிந்து கொள்ள முடியும் என்றும் கூறினார்.

தனிமனிதத் துன்பங்களைக் களைய வேம்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டாலும் இதில் நன்னெறிக்கூறுகள் கவனத்தில் கொல்ளப்பட வேண்டும், இது இல்லாமல் அனைத்து சாதனைகளும் வரையறைக்கு உட்பட்டதாக, முற்றுப் பெறாததாக இருக்கும் என்றும் பிஷிகெல்லா கூறினா








All the contents on this site are copyrighted ©.