2009-02-17 15:13:15

திருப்பீடத்திற்கும் வியட்நாமிற்கும் இடையே அரசியல் உறவுகளை நிலைப்படுத்துவது குறித்தப் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று வருகின்றன


17பிப்.2009. திருப்பீடத்திற்கும் வியட்நாமிற்கும் இடையே அரசியல் உறவுகளை நிலைப்படுத்துவது குறித்தப் பேச்சுவார்த்தைகள் இருதரப்பினரிடையே தலைநகர் ஹனோயில் இடம் பெற்று வருகின்றன.

இருதரப்பினரிடையே நேற்று தொடங்கிய இப்பேச்சுவார்த்தைகள் முழு அரசியல் உறவுக்கு இட்டுச் செல்லும் என நம்புவதாக, இதில் கலந்து கொள்ளும் . திருப்பீட அதிகாரி அருட்திரு பியத்ரோ பரோலின் கூறினார்.

புத்தமதத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட வியட்நாமின் 8 கோடியே 60 இலட்சம் மக்கட்தொகையில் 7 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்களாக உள்ள நிலையில் ஹனோயில் ரசால் பறிக்கப்பட்ட திருச்சபை நிலங்களைத் திரும்பப் பெற போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவில் சீனா, வடகொரியா. லாவோஸ், மலேசியா, மியான்மார் மற்றும் வியட்நாமுடன் முழு அரசியல் உறவைக் கொண்டிராத வத்திக்கான் நாடு, அனைத்து நாடுகளுடன் உறவை உருவாக்க முயன்றுவருவது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.