2009-02-14 15:32:33

கலிலேயோவின் 445ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பேராயர் ரவாசி திருப்பலி


14பிப்.2009. நவீன அறிவியலின் தந்தை என அழைக்கப்படும் கலிலேயோ கலிலெய் பிறந்ததன் 445ஆம் ஆண்டை உலக அறிவியலார் கழகம் இஞ்ஞாயிறன்று சிறப்பிப்பதை முன்னிட்டு உரோம் தூதர்களின் புனித மரியா மற்றும் மறைசாட்சிகளின் பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றுவார் திருப்பீட கலாச்சார அவைத் தலைவர் பேராயர் ஜான்பிராங்க்கோ ரவாசி.

கடந்த 400 வருடங்களில் கலிலேயோவின் பெயரில் திருப்பலி நிகழ்த்தப்படவுள்ளது இதுவே முதன்முறையாகும். இன்னும், 115 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ பத்தாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட உலக அறிவியலார் கழகமும் முதன்முறையாக இந்த நவீன அறிவியலின் தந்தையைக் கவுரவிக்கிறது.

கலிலேயோ, 1609ம் ஆண்டில் தொலைநோக்குக் கருவியை முதன்முதலில் பயன்படுத்தியதன் 400ம் ஆண்டையொட்டி ஐக்கிய நாடுகள் நிறுவனம் இவ்வாண்டை சர்வதேச வானியல் ஆண்டாகவும் சிறப்பித்து வருகிறது. இந்நிகழ்வு தொடர்பாக உரோம் தூதர்களின் புனித மரியா மற்றும் மறைசாட்சிகளின் பசிலிக்காவில் கலிலேயோவின் பெரும் கண்டுபிடிப்புக்கள் பற்றிய அருங்காட்சியகமும் வைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் பைசா நகரில் 1564 ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி பிறந்தவர் கலிலேயோ கலிலெய்.








All the contents on this site are copyrighted ©.