2009-02-14 15:30:35

ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் மன்றத் தலைவர் பிரதிநிதிகள் நியமனம்


14பிப்.2009. வருகிற அக்டோபர் 4 முதல் 25 வரை நடைபெறவுள்ள ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் மன்றத்திற்குத் தலைவர் பிரதிநிதிகளையும், பொது அறிவிப்பாளரையும் சிறப்பு செயலர்களையும் இன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருவழிபாடு மற்றும் திருவருட்சாதன பேராயத்தின் முன்னாள் தலைவர் கர்தினால் பிரான்சிஸ் அரின்சே, செனகல் நாட்டு டாக்கர் பேராயர் தெயதோர் ஆட்ரியன் சார், தென்னாப்ரிக்காவின் டர்பன் கர்தினால் வில்ப்பிரிட் நாப்பியர் ஆகியோரை தலைவர் பிரதிநிதிகளாகவும், கானாவின் கேப் கோஸ்ட் பேராயர் கர்தினால் பீட்டர் கோத்வோ ஆப்பியா தூர்க்சன்னை பொது அறிவிப்பாளராகவும், அங்கோலாவின் லுவாண்டா பேராயர் தமியாவோ அந்தோணியோ பிராங்கிளின், சாட் நாட்டின் சார் ஆயர் எட்மண்ட் த்ஜிடாங்கர் ஆகியோரை சிறப்பு செயலர்களாகவும் இன்று நியமித்துள்ளார் திருத்தந்தை.

ஒப்புரவு, நீதி மற்றும் அமைதியின் பணியில் ஆப்ரிக்காவில் திருச்சபை- நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்........நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது என்பது இந்த 2வது சிறப்பு ஆயர் மன்றத்திற்கானத் தலைப்பாகும்.










All the contents on this site are copyrighted ©.