2009-02-13 20:15:41

புனித பூமிக்குத் திருப்பயணம் செல்லத் தயாராகிறார் திருத்தந்தை . 130209


அமெரிக்க யூதகுல நிறுவனங்களின் முக்கியத் தலைவர்கள் இவ்வாரம் வியாழக்கிழமை திருத்தந்தையை வத்திக்கானில் சந்தித்துத்துப் பேசியபோது திருத்தந்தை புனித பூமிக்குச் செல்லவிருக்கும் அவரது திட்டம் பற்றித் தெரிவித்தார் . அவர் இந்த ஆண்டு மேமாதம் இரண்டாம் வாரத்தில் புனித பூமிக்குச் செல்லவிருப்பதாக வத்திக்கானிலும் எருசலேத்திலும் இருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன .நியூயார்க் நகரின் ராபி ஆர்தர் ஸ்னேயர் புனித பூமி திருத்தந்தையை எதிர்பார்ப்பதாகக் கூறினார் . கிறிஸ்தவத்தின் வேர்கள் புண்ணியபூமியில் உள்ளன .தொடக்க காலத்திலிருந்து கிறிஸ்தவத்தின் வாழ்வும் வழிபாடும் யூத மதத்தோடு நெருங்கிய தொடர்புடையது எனத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் தெரிவித்தார் .








All the contents on this site are copyrighted ©.