2009-02-13 20:23:01

இலத்தீன் ரீதியிலான ஆயர்களின் 21 ஆவது பொதுக்குழு ,130209.


இலத்தீன் ரீதியிலான ஆயர்களின் 21 ஆவது பொதுக்குழு அமர்வு மைசூரில் தொடங்கியுள்ளது . இம்மாதம் 12 தேதியிலிருந்து 18 தேதி வரையில் நடக்கிறது . இந்தியாவுக்கான வத்திக்கான் தூதர் மேதகு பேத்ரோ லோப்பஸ் குவிண்டானா இந்த வியாழனன்று திருப்பலியோடு இந்த அமர்வைத் தொடங்கி வைத்தார் . 120 ஆயர்களும், பல குருக்களும் துறவியரும் , பொதுநிலை இறைமக்களும் திருப்பலியில் கலந்து கொண்டனர் . தொடக்கத்தில் இலத்தீன் ரீதி ஆயர் மன்றத் தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் வத்திக்கான் தூதரையும் மற்ற அனைவரையும் வரவேற்று வத்திக்கான் தூதரை திருப்பலி நிகழ்த்துமாறு அழைத்தார் . தம்முடைய மறையுரையில் வத்திக்கான் தூதர் லோப்பஸ் குவிண்டானா ஆயர்கள் இறைவார்த்தையை பயன்படுத்துவதில் வல்லவர்களாகத் திகழுமாறு கேட்டுக் கொண்டார் . மைசூருக்கு வரவழைத்து பொதுக்குழு அமர்வுக்கு ஏற்பாடு செய்த மேதகு தாமஸ் வாழப்பில்லி அனைவரையும் பாசத்தோடு வரவேற்றார் . திருத்தந்தையும், வத்திக்கானின் நற்செய்தி அறிவிப்பு மன்றத்தின் தலைவர் கர்தினால் ஈவான் டயசும் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தனர் .








All the contents on this site are copyrighted ©.