2009-02-12 19:15:26

கம்யூனிசம் வீழ்ந்த நாடுகளில் மறைபோதகம் தேவை,திருத்தந்தை.1202.


கம்யூனிசத்தின் பெர்லின் சுவர் வீழ்ந்து 20 ஆண்டுகள் ஆகியுள்ளன .முந்நாள் கம்யூனிச நாடுகளின் ஆயர்களின் கூட்டம் குரோஷியா நாட்டின் தலைநகர் ஷாரெப்பில் நடந்து இந்த வாரம் புதனன்று முடிந்தது . 13 ஆயர்கள் குழுவை ஷாரெப்பின் பேராயர் கர்தினால் ஜோசப் போசானிக் வரவழைத்திருந்தார் . குரோஷியாவின் கர்தினால் அலோய்சி ஸ்டெப்பினாக்கின் முத்துப்பேறு பட்டம் பெற்ற ஆண்டுவிழாவும் கொண்டாடப்பட்டது . முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் இவருக்கு முத்துப்பேறு பட்டம் கொடுத்திருந்தார் .

இந்தக் கூட்டத்துக்கு திருத்தந்தையின் பெயரால் வத்திக்கான் திருப்பீடச் செயலர் கர்தினால் தார்சீசியோ பெர்த்தோனே செய்தி அனுப்பியிருந்தார் .

அதில் திருத்தூதர் பவுல் கூறுவது போல வாய்ப்புக் கிடைத்தாலும் இல்லாவிடினும் , நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்பதை திருத்தந்தை வலியுறுத்தினார் .

20 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நற்செய்தி அறிவிப்பது மிகவும் கடினமாக இருந்தது . முத்துப்பேறு பட்டம் பெற்றுள்ள கர்தினால் ஸ்டெப்பினாக் போன்ற பலர் துன்புறுத்தப்பட்டார்கள் எனத் திருத்தந்தை கூறியிருந்தார் .

கம்யூனிசத்துக்குப் பிறகு திருச்சபை புதிய சவால்களைச் சந்திக்கிறது . இருப்பினும் உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்ற செய்தி கட்டளையாகத் தொடர்கிறது எனத் திருத்தந்தை குரோஷியாவில் நடந்த ஆயர்கள் கூட்டத்துக்கு செய்தி அனுப்பியிருந்தார் .








All the contents on this site are copyrighted ©.