2009-02-10 16:27:37

வத்திக்கான் நாடு உருவாக்கப்பட்டதன் 80ம் ஆண்டை முன்னிட்டு வத்திக்கான் சில முக்கிய நிகழ்வுகளை நடத்தவுள்ளது


10பிப்.2009. உலகின் மிகச்சிறிய நாடான வத்திக்கான் நாடு உருவாக்கப்பட்டதன் 80ம் ஆண்டு நாளை சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு வத்திக்கான் சில முக்கிய நிகழ்வுகளை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தினத்தை முன்னிட்டு பிப்ரவரி12ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை அருங்காட்சியகமும், மாபெரும் பணிக்காக-சிறிய பகுதி என்ற தலைப்பில் பிப்ரவரி 12 முதல் 14 வரை மாநாடும், இன்னும் 12ம் தேதி மாலை திருத்தந்தையின் முன்னிலையில் இசைக்ச்சேரியும் நடைபெறும்.

இத்தாலிய அரசுக்கும் திருப்பீடத்துக்குமிடையே 1929ம் ஆண்டு பிப்.11ம் தேதி கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் வத்திக்கான் நாடு உருவானது. இத்தாலிய அரசர் 3ம் விக்டர் சார்பில் இத்தாலிய பிரதமர் பெனிட்டோ முசோலினியும், திருத்தந்தை 11ம் பத்திநாதர் சார்பில் திருப்பீட செயலர் கர்தினால் பியத்ரோ கஸ்பாரியும் இதில் கையெழுத்திட்டனர்.

வத்திக்கான் நகர நாட்டில் திருப்பீடத்தின் முழு இறையாண்மையை அங்கீகரிக்கும் அரசியல் உடன்பாடு, இத்தாலியில் கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் கத்தோலிக்க மதத்தின் நிலைமையை வகைப்படுத்தும் ஒப்பந்தம், திருப்பீடம் இழந்த நிலப்பகுதிகள் மற்றும் சொத்துக்களைச் சரிக்கட்டும் நிதி சார்ந்த ஒப்பந்தம் ஆகிய மூன்றும் இந்த 1929ம் ஆண்டு இலாத்தரன் ஒப்பந்தங்களில் கையெழுத்தாகின.










All the contents on this site are copyrighted ©.