2009-02-10 16:24:19

சிம்லா-சண்டிகார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் அருட்பணி இக்னேஸியஸ் லொயோலா மஸ்கரெனாஸ்


10பிப்.2009. இந்தியாவின் சிம்லா-சண்டிகார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்பணி இக்னேஸியஸ் லொயோலா மஸ்கரெனாசை இன்று நியமித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

டெல்லியில் 1949ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி பிறந்த இவர், பள்ளி படிப்பிற்குப் பின்னர் ஆஜ்மீர் புனித ஆன்செலம் இளம் குருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் பாம்பே கரேகாவுன் புனித பயஸ் குருத்துவ கல்லூரியில் மெய்யியலையும் டெல்லி வித்ய ஜோதியில் இறையியலையும் முடித்து டெல்லி உயர்மறைமாவட்டத்திற்கென 1977ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

டெல்லி பேராலய உதவி பங்குக்குரு, வினய் குருகுல் இளம் குருத்துவ கல்லூரி அதிபர், டெல்லி உயர்மறைமாவட்ட பெரிய குருத்துவ கல்லூரி அதிபர், அடிப்படை கிறிஸ்தவ குழுக்களின் இயக்குனர், அருங்கொடை இயக்க தலைவர் எனப் பல பொறுப்புக்களை வகித்த பின்னர், 2006ம் ஆண்டு முதல் சிம்லா-சண்டிகார் மறைமாவட்டத்தின் காலியிலுள்ள கிறிஸ்து ஜோதி குருகுல் மாகாண குருத்துவ கல்லூரியின் அதிபராகப் பணியாற்றி வந்தார்.

1964ல் உருவாக்கப்பட்ட சிம்லா-சண்டிகார் மறைமாவட்டத்தின் 2 கோடிக்கு மேற்பட்ட மக்களில் ஏறத்தாழ 13 800 பேர் கத்தோலிக்கர். இங்கு 42 பங்குகளும், 98 குருக்களும் 62 ஆண் துறவிகளும் 290 பெண் துறவிகளும் 18 குருத்துவ மாணவர்களும் உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.