2009-02-09 14:41:18

பிப்ரவரி 10 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


கி.பி. 60- புனித பவுல் மால்ட்டாவில் கப்பல் சேதத்தில் சிக்கினார் என்று நம்பப்படுகிறது.

1855 – அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு வெளியே அந்நாட்டுப் பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு குடியுரிமை வழங்குவதற்கென அந்நாட்டுக் குடியுரிமை சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டது.

1870 – YWCA என்ற இளம் கிறிஸ்தவப் பெண்கள் கழகம் நியுயார்க் நகரில் உருவானது.

1947 – இரண்டாம் உலகப் போர் அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

1990 – பிப்ரவரி 11ம் தேதி நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்படுவார் என்று தென்னாப்ரிக்க அரசுத்தலைவர் தெ கிளர்க் அறிவித்தார்.

பிப்ரவரி 10 புனித ஸ்கொலாஸ்திக்கா விழா. இவள் புனித ஆசீர்வாதப்பருடைய தங்கை. இருவரும் ஆண்டுக்கொருமுறை சந்தித்து ஆன்மீகக் காரியங்கள் பற்றி விவாதிப்பர். ஒருநாள் இரவு முழுவதும் கடவுளைப் பற்றிப் பேசுவதில் செலவழித்தனர். இவளது ஆன்மா மாடப்புறா வடிவில் விண்ணகம் சென்றதை புனித ஆசீர்வாதப்பர் கண்டார்.








All the contents on this site are copyrighted ©.