2009-02-07 12:59:17

முதல் ஆசிய குருக்கள் கழகத்திற்கு திருப்பீடம் அங்கீகாரம்


07பிப்.2009. ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் குருக்கள் கழகமான பிலிப்பைன்ஸ் மறைபோதக கழகத்திற்குத் திருப்பீடம் சட்டரீதியான அங்கீகாரத்தை அளித்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கழகத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் பாப்பிறை ஆணையில் விசுவாசபரப்புப் பேராயத் தலைவர் கர்தினால் ஐவன் டயஸ் கையெழுத்திட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் நானூறாம் ஆண்டை முன்னிட்டு அந்நாட்டு ஆயர்கள் 1965ம் ஆண்டில் எம்.எஸ்.எப். என்ற பிலிப்பைன்ஸ் மறைபோதக கழகத்தை உருவாக்கினர். இறைவன் தங்களுக்குக் கொடுத்த விசுவாசம் என்னும் கொடைக்கு அவருக்கு நன்றி சொல்லுவதைத் தெளிவாக வெளிப்படுத்துவதற்கும், அதனை ஆசியா மற்றும் உலகின் பிற பகுதிகளில் வாழும் மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்குமென இக்கழகத்தைத் தோற்றுவித்தனர்.

தற்சமயம் இதன் 70க்கும் மேற்பட்ட அங்கத்தினர்கள் ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியா, இந்தியா உட்பட 13 நாடுகளில் பணியாற்றுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.