2009-02-07 13:01:31

இலங்கை மதமாற்றத் தடை மசோதாவை நீக்க அமெரிக்க ஐக்கிய நாட்டு காங்கிரஸ் அவை உறுப்பினர்கள் 15 பேர் அழைப்பு


07பிப்.2009. இலங்கையில் மதமாற்றத்தைத் தடை செய்வதற்கென பரிந்துரைக்கப்பட்டுள்ள மசோதாவை நீக்குமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஜலியா விக்ரமசூரியாவுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு காங்கிரஸ் அவை உறுப்பினர்கள் 15 பேர் இணைந்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

இம்மசோதா இலங்கை மக்களின் சமய சுதந்திரத்தைப் பாதுகாக்காது, மாறாக அதற்குப் பாதகமாக இருக்கும் என்று அக்கடிதம் கூறுகிறது.

கடந்த ஜனவரியில் அங்கீகரிக்கப்பட்ட இம்மதமாற்றத்தைத் தடை மசோதா இம்மாதத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் இறுதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இம்மசோதாவின்படி இலங்கை குடிமகனை மதமாற்ற முயற்சிப்பவர்க்கு ஏழாண்டு வரையிலானச் சிறைத் தண்டனையும், ஐந்து இலட்சம் இலங்கை ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்







All the contents on this site are copyrighted ©.