2009-02-06 17:15:03

பேராயர் ஜோசப் கோவால்சிக்கு கம்யூனிசத்தோடு தொடர்பு இல்லை.0602.


வத்திக்கான் அதிகாரியாக 1989 இல் இருந்த போலந்து நாட்டின் பேராயர் ஜோசப் கோவால்சிக் கம்யூனிஸ்ட் ஆட்சியாளரோடு தொடர்பு வைத்திருக்கவில்லை என்கிறார் அந்நாட்டு அரசு அதிகாரி . பேராயர் ஜோசப் கோவால்சிக் வத்திக்கானின் போலந்து நாட்டு தூதராக முன்னர் இருந்தபோது கம்யூனிஸ்ட் ஆட்சியாளரோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்பட்டதை இந்த ஆண்டு ஜனவரிமாதம் 9 ஆம் தேதி போலந்து நாட்டின் ஆயர்கள் குழு வன்மையாகக் கண்டித்திருந்தது . முந்நாள் திருத்தந்தை இது பற்றி முன்னர் கேள்விப்பட்டபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறியிருந்தார் . ஆனால் இது பொய்ப்புகார் என்பதை வத்திக்கான் தெரிந்திருந்ததால் பேராயர் ஜோசப் கோவால்சிக் வத்திக்கானில் நல்ல சேவையிலிருந்து வந்தார் . போலந்து நாட்டு இரகசியத்துறை அதிகாரி ஸ்லாவோமீர் கோட்டாவ்ஸ்கி பேராயருக்கு கம்யூனிஸ்ட் ஆட்சியாளரோடு எந்தவிதத் தொடர்பும் இருக்கவில்லை என சாட்சியம் கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.