2009-02-06 17:10:52

ஐ .நாவின் முயற்சிகளைப் பாராட்டுகிறது வத்திக்கான் திருப்பீடம்.0602.


கூட்டுப் பொறுப்பு உணர்வை ஊக்குவிக்கும் ஐ .நாவின் முயற்சிகளைப் பாராட்டுகிறது வத்திக்கான் திருப்பீடம் . அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் சமூக ஒற்றுமைக்கு முக்கியம் என்கிறது வத்திக்கான் . ஐ.நாவின் பொருளாதார மற்றும் சமூகக் குழுமத்தில் உரை நிகழ்த்திய பேராயர் செலஸ்டீனோ மிலியோரே இதனை அக்கூட்டத்தில் உறுதிப்படுத்தினார் . சமூக ஒற்றுமையும் சமூக நீதியும் மனிதாபிமான அடிப்படையில் எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார் . இதுவே இன்றைய உலகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு தரக்கூடியது என்றார் . ஏழ்மையைப் போக்கவும் சமூகத்தில் ஒவ்வொருவரும் சமூக , பொருளாதார , கலாச்சார ரீதியில பங்கேற்கவும் உறுதுணையாக கூட்டுப் பொறுப்புணர்வை வளர்க்கும் ஐ,நாவின் முயற்சிகளை வத்திக்கான் திருப்பீடம் பாராட்டுவதாகப் பேராயர் செலஸ்டீனோ மிலியோரே ஐ.நா சபையில் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.