2009-02-06 17:19:20

இலங்கையில் மக்களுக்குத் துணையாக குருக்கள் இருப்பார்கள்.0602.


இலங்கையின் வடபகுதியில் துன்புறும் மக்களுக்குத் துணையாக அருள் தந்தையர்கள் இருப்பார்கள் என்கின்றார் வத்திக்கான் தூதர். போர் நடக்கும் இடத்தில் 22 குருக்களும் 27 அருள் சகோதரிகளும் மக்களுக்குத் தொண்டு புரிந்து வருகின்றார்கள் . அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு வற்புறுத்தி வருகிறது . அங்குள்ள மக்களும் அங்கிருந்து வெளியேறவேண்டும் எனக் கூறிவருகிறது . அவ்வாறு அவர்கள் வெளியேறாவிட்டால் பொதுமக்களின் உயிருக்கு அரசு பொறுப்பல்ல எனவும் கூறிவருகிறது . கத்தோலிக்கக் குருக்கள் அங்கு மக்களோடு தங்கி , அவர்களுக்குச் சேவை செய்வார்கள் என வத்திக்கானின் தூதர் மேதகு பேராயர் மரியோ ஷெனாரி இலங்கையின் தலைவர் இராஜபக்சேவுக்குத் தெரிவித்துள்ளார் . அங்கு பணிசெய்து வரும் கத்தோலிக்க மத குருமார்கள் பல துறவறச் சபைகளைச் சேர்ந்தவர்கள் . அங்குள்ள மக்களுக்குத் தம் நெருக்கத்தைக் காட்டும் வண்ணம் வத்திக்கான் தூதர் ஷெனாரி ஜாப்னா சென்று இவ்வியாழன் அங்குள்ளவர்களோடு இணைந்து அமைதிக்காகச் செபித்தார் . அகில உலக செஞ்சிலுவைச் சங்கமும் மற்ற தொண்டு நிறுவனங்களும் பொது மக்களைப் பற்றி் அரசு கொஞ்சமும் கவலையில்லாது கொன்றும் காயப்படுத்தியும் வருவதைக் கண்டித்துள்ளன







All the contents on this site are copyrighted ©.